வேடிக்கை மொழிகள்
Appearance
- என்னதான் பெரிய பக்திமானா இருந்தாலும், அவரால கப்பல் கிளம்புறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் வைக்க முடியாது. - பகுத்தறிவோடு யோசிப்போர் சங்கம்
- அண்ணே... கருப்பு ஒரு கலரு,வெள்ளை ஒரு கலரு, ஆனா கருப்பு வெள்ளை டீ.வி. கலர் டீ.வி. கிடையாது. - இன்னமும் கருப்பு வெள்ளை டீ.வி. பார்ப்போர் சங்கம்
- பையி 'கட்'டானா தைக்கலாம்; துணி 'கட்'டானாலும் தைக்கலாம்; தோலு 'கட்'டானாகூட தைக்கலாம்;ஆனா,கரன்ட் 'கட்'டானா தைக்க முடியுமா? - இருட்டுல உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்
- பவர் கிளாஸை, என்னதான் ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தாலும் அது கூலிங் கிளாஸ் ஆகாது - கூலிங் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்
- கூலிங் கிளாஸ் போட்டு பவர் ரேஞ்சர்ஸ் பார்த்தாலும் அது பவர் கிளாஸ் ஆகாது. - பவர் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்
- பாக்கு மரத்துல பாக்கு இருக்கும்., தேக்கு மரத்துல தேக்கு இருக்கும், ஆனா பன மரத்துல பணம் இருக்காது. - தத்துவ ரீதியாக மட்டுமே யோசிப்போர் சங்கம்
- சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!! - எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்
- Tea மாஸ்டர் என்னதான் லைட்டா Tea போட்டாலும், அதுலயிருந்து வெளிச்சம் வராது. - இது ஒரு சங்கம் சேராத தத்துவம்!!!
- அண்ணே... விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார். ஆனா, கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா? - ரூம் போட்டு, மல்லாக்கப் படுத்து, பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.
- அண்ணே... நாம 21ஐ "டுவென்டி ஒன்"னு சொல்றோம். 31ஐ "தேர்ட்டி ஒன்"னு சொல்றோம். 41ஐ "ஃபார்டி ஒன்"னு சொல்றோம். அப்ப ஏன், 11ஐ மட்டும் "ஒன்ட்டி ஒன்"னு சொல்லக் கூடாது? - பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.
- அண்ணே... எனக்கு ஒரு சந்தேகம்... நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது. ஓவியக் கலைன்னா படம் வரையறது. அப்ப தவக்களைன்னா? - நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்
- அண்ணே... Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்! ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!! கொஞ்சம் யோசிங்க!!! - பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்
- செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது. - தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)