உள்ளடக்கத்துக்குச் செல்

வேதம்

விக்கிமேற்கோள் இலிருந்து

வேதங்கள் (Vedas) என்பவை பொதுவாக இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

வேதம் குறித்த கருத்துகள்

[தொகு]
  • நான் வேதத்தைப் படித்திருக்கிறேன். அதில் நமது ஞானத்தை விருத்தியாக்குதற்கு ஒன்றுமே சொல்லவில்லை. மற்றும், நாம் தெரிந்து கொள்ளுதற்குரிய சிலாக்கியமான விஷயங்கள் ஒன்றுமேயில்லை என்றும் நான் தெரிந்து கொண்டேன்.
  • தர்ம ஸ்தானங்கள் பதினான்கில் அங்கம் ஆறு: உபாங்கம் நான்கு, வேதம் நான்கு- தமிழில் மிகவும் பிரசித்தமான நீதி சாஸ்திரமாகிய குறள் தமிழ் வேதம் என்று சொல்லப்படுகிறது. - காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசாரியார்[2]
  • சில பேர் ‘வேதத்தை நம்ப முடியுமா? அதற்கு ஒரு யுக்தி சொல்லுங்கள்' என்று கேட்கிறார்கள். புக்திக்கு எட்டுமானால், அதை வேதம் சொல்லுவானேன்? யுக்திக்கு எட்டாததைச் சொல்லத்தான் வேதம் இருக்கிறது. - காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசாரியார்[2]
  • எதை ருசுவினால் நிரூபிக்க முடியாதோ, எங்கே புத்தி எட்டவில்லையோ, அதற்காகத்தான் வேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்திரியங்களுக்கு அகப்படாததை விளக்குவது வேதம். - காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசாரியார்[2]

பழமொழிகள்

[தொகு]
  • அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது (மலையாளப் பழமொழி)

குறிப்புகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. 2.0 2.1 2.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 318. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வேதம்&oldid=36256" இலிருந்து மீள்விக்கப்பட்டது