வேமனா
Appearance
குமரகிரி வேம ரெட்டி, தெலுங்கு கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார். இவரது பாடல்கள் இயல்பான, எளிமையான தெலுங்கிலேயே எழுதப்பட்டிருக்கும். அறிவு, நேர்மை உள்ளிட்ட குணங்களைப் பற்றியே இவரது பாடல்களில் போதித்திருப்பார். இவர் யோகி வேமனா எனவும் அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- நாள்தோறும் வேதத்தைக் கற்றாலும் கேட்டாலும், கொடியவன் புனிதமடைந்திடுவானா?[1]
- கற்களை மட்டும் வணங்கி, கண்கண்ட பரமனை நினைந்திடாதவர் மிருகம் போன்றவர்.[1]
- உயிருள்ள எருதுக்கு புல்லைக் கூட போடாதவர் உயிரற்ற நந்தியை வணங்குவதால் என்ன பயன்.[1]
- ஈட்டுகின்ற பெருஞ்செல்வம் செல்வம் அல்ல; இணையற்ற நன்மகவே செல்வம்.[1]
- தோன்றி வாட்டுகின்ற முதுமைவரை நேர்மையாக வாழ்வதுவே செல்வத்துள் சிறந்த செல்வம்.[1]
- கணவனுக் கடங்காப் புல்லிய மனையாள் காலனைப் பேயினை ஒப்பாள்.[1]
- நாதன் களிப்பே பெரிதென்னும் நல்லாள் உலகிற் கணியாவாள்.[1]
- சிற்றுணர்வோர் எப்பொழுதும் தற்பெருமை பேசித் திரிந்திடுவர்; பேரறிஞர் அமைதியுடன் வாழ்வர்.[1]