ஸ்டீவ் வாஸ்னியாக்
ஸ்டீவ் வாஸ்னியாக் (Steve Wozniak, பிறப்பு ஆகஸ்ட் 11, 1950) அமெரிக்கவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் 1976 இல் ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார்.
மேற்கோள்கள்
[தொகு]- பெரும்பான்மை இந்தியர்களுக்குச் சுதந்திரமாகச் சிந்திக்கும் ஆற்றலோ, கற்பனைத் திறனோ இல்லை. கற்பதை அப்படியே மூளையில் ஏற்றிக் கொள்கிறார்கள்; தேர்வில் எழுதி பட்டங்களை வெல்கிறார்கள். அவர்களிடம் நிறைய எதிர்ப்பாரக்க முடிவதில்லை. இந்தியாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் என்று 'இன்போசிஸ்' நிறுவனத்தைச் சொல்லலாமா? அதுகூட 'கூகுள்' 'ஆப்பில்' 'முகநூல்'போல ஒன்றாக உருவாகிவிடவில்லை. 'இன்போசிஸ்' புதிதாக எதையும் கண்டுபிடிப்பதில்லை, கண்டுபிடிப்பதைப் பயன்படுத்துகிறது. 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கான 'கீ நோட்சை' நானே மூன்று முறை எழுதி தந்திருக்கிறேன். இந்தியாவில் படைப்பாற்றல் இல்லை என்பதைவிட, அவ்வாறு புதிதாக எதையும் செய்வதற்கு ஊக்குவிப்பு இல்லை என்பதே உண்மை. (2019 இல் இவர் இந்தியாவந்தபோது தெரிவித்தது)[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ ஒடுக்குமுறைத் தேர்வுகள் (கட்டுரை), சமஸ், இந்து தமிழ் 2020 சனவரி 31