உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெலன் கெல்லர்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர்அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

 • அடக்கம் என்பது ஓர் அணிகலன் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவசியம் தேவைப்பட்டாலே தவிர அதைப் பயன்படுத்த மாட்டேன்.
 • பறக்க விரும்புபவனால் படர முடியாது.
 • மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
 • ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.[1]
 • உலகின் சிறந்த மற்றும் அழகான விடயங்களைப் பார்க்கவோ, தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் உணர வேண்டும்.
 • சூரிய ஒளியை நோக்கி உங்களது முகத்தை வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள், உங்களால் நிழலைப் பார்க்க முடியாது.
 • தனியாக நாம் சிறிய அளவே செயல்பட முடியும்; ஒன்றாக நாம் பெரிய அளவில் சாதிக்க முடியும்.
 • உலகில் மகிழ்ச்சி மட்டுமே இருந்திருந்தால், ஒருபோதும் நாம் துணிச்சல் மற்றும் பொறுமையை கற்றுக்கொண்டிருக்க முடியாது.
 • இருள், அமைதி போன்ற எதுவாயினும் தனக்கான அழகினை தன்னகத்தே கொண்டுள்ளது.
 • சுயேச்சை இரக்கமே நமது மோசமான எதிரி, இதை வளர விட்டோமானால் நம்மால் இந்த உலகில் விவேகமான எதையும் செய்ய முடியாது.
 • பார்வையின்மை பொருட்களிடமிருந்து மக்களைப் பிரிக்கின்றது; காது கோளாமை மக்களிடமிருந்து மக்களைப் பிரிக்கின்றது.
 • நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேனோ அது வெளியில் எங்கும் இல்லை. எனக்குள்ளேயே உள்ளது.
 • மகிழ்ச்சியை உருவாக்காமல் அதை அனுபவிக்க யாருக்கும் உரிமை இல்லை.
 • கல்வியின் மிக உயர்ந்த பலன் சகிப்புத்தன்மையே.
 • நம்பிக்கை சாதனைகளுக்கு வழி வகுக்கிறது என்பது உறுதியான ஒன்று.
 • வெளிச்சத்தில் தனியாக நடந்து செல்வதைவிட, இருளில் நண்பருடன் நடந்து செல்வது சிறந்தது.
 • உறுதி மற்றும் நம்பிக்கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹெலன்_கெல்லர்&oldid=13747" இலிருந்து மீள்விக்கப்பட்டது