சாரா அபூபக்கர்
Appearance
சாரா அபூபக்கர் கர்நாடகத்தைச் சேர்ந்த இசுலாமிய பெண் எழுத்தாளர் . இசுலாமியச் சமூகப் பெண்களின் நடைமுறைச் சிக்கல்கள், சமூகம் மீதான விமர்சனங்களைத் தன் படைப்புகளில் முன்வைத்து வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானே வலி தெரியும். அவர்களால் தானே உண்மையை ஒப்பனையின்றி வெளிப்படுத்த முடியும்.
- நவீன கல்வி முறை எந்த விதத்திலும் இசுலாமியச் சமூகத்தை முன்னேற்றவில்லை. பதிலாக பர்தா அணிவது போன்ற பிற்போக்கான நடவடிக்கைகளை நம் சமூகத்தில் படித்த பெண்களே தொடர்வதற்குத்தான் அது வழி செய்திருக்கிறது.
- எழுத்து என்பது சமூகத்தின் கண்ணாடியாக, அதன் சாதக பாதக அம்சங்களைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சராசரி இலக்கிய அளவுகோல் சட்டகங்களில் என்னுடைய எழுத்து அடைபடுவதை நான் விரும்பவில்லை.
- இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த நிலை பெருமளவில் மாறிவிடவில்லை. உலகம் இத்தனை முன்னேறியும் இன்னமும் எங்கள் (இசுலாமிய) சமூகத்துப் பெண்கள் பல நூற்றாண்டுகள் பினதங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களது பிரச்னைகளை பேசாமல் வேறு எதை நான் பேசுவது.