உண்மை

விக்கிமேற்கோள் இலிருந்து

உண்மை (Truth) என்னும் சொல் வாய்மை, நேர்மை[1] போன்ற பல பொருள்களில் அறியப்பட்டு, ஆளப்பட்டு வருகின்றது. மெய்யியலாளர்களும், பிற அறிஞர்களும் "உண்மை" என்பதன் வரைவிலக்கணம் சார்ந்து ஒத்த கருத்து உடையவர்கள் அல்லர். உண்மை தொடர்பான பல கோட்பாடுகள் இன்னும் சர்ச்சைக்கு உரியனவாகவே உள்ளன.

வாய்மை என்பது சொல் வழுவாமையைக் குறிக்கும். அதாவது உள்ளத்தில் உள்ளது மாறாமல் அதனை வாய் வழியாகப் பேசுவது வாய்மை எனப்படும். வாய்மையைப் பற்றி திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது

வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல்.

காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிட உண்மை சிறந்தது. ~ டிஸ்ரேலி

உண்மை பற்றிய மேற்கோள்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  • தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது. - மகாத்மா காந்தி
  • உண்மை என் உடலில் ஊறிக் கிடக்கிறது. என்னிடமிருந்து அதனை எதனாலும் அகற்றிவிட முடியாது. - மகாத்மா காந்தி[2]
  • உள்ளம் தெளிவாக இருந்தால் வாக்கினில் உண்மை உண்டாகும். - பாரதியார்
  • உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க முயலுங்கள். - சுவாமி சிவானந்தர்
  • உண்மையைத் தேடு. தளைகளிலிருந்து அது உன்னை விடுவிக்கும். - பட்சி சாஸ்திரி
  • கலை என்பது விளம்பரத்தின் வடிவம், ஆனால் உண்மையின் பிம்பம். - கென்னடி
  • ஒருவருக்கொருவர் சச்சரவு செய்கிறபோது உண்மை ஒதுக்கித் தள்ளப்படுகிறது. - சைரஸ்
  • காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிட உண்மை சிறந்தது. - டிஸ்ரேலி
  • உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க. - ராபிலே[3]
  • கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே, - அலெக்சான்டர் போப்[3]
  • உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே. - ஹீன்[3]
  • உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - பாஸ்கல்[3]
  • உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது. - வில்லியம் ஷேக்ஸ்பியர்[3]
  • உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்:-அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது. - ஜான் டிரைடன்[3]
  • உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன். உண்மை அறிவதொன்றே என் விருப்பம். - லாக்ரடீஸ்[3]
  • கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கோட்டால்-இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும்- நான் இடது கை முன் தலையைத் தாழ்த்தி, 'தந்தையே தாரும்; உண்மை உமக்கே உரியது' என்று கூறுவேன். ஏனெனில், மனிதன் உண்மையை அடைவதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளை விருத்தி செய்துகொள்கிறான். - லெஸ்ஸிங்[3]
  • உண்மையை நேசி. ஆனால், பிழையை மன்னித்து விடு. -வோல்ட்டேர்[3]
  • அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்தா. ஆனால், உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது; எந்தக் குறையையும் பொறுக்காது. - ரஸ்கின்[3]
  • ஏன் உண்மையாய் நடக்க வேண்டும்?- இந்தக் கேள்வி மூலமே இகழ் தேடிவிட்டாய்- 'மனிதனாயிருப்பதால்' என்பதே அதற்கு மறுமொழி. - ரஸ்கின்[3]
  • உண்மை பேசல் அழகாய் எழுதுவதை ஒக்கும். பழகப் பழகவே கைகூடும். ஆசையைவிடப் பழக்கத்தையே பொறுத்ததாகும். - ரஸ்கின்[3]
  • உண்மை நாடவே நமக்கு உரிமை ஆண்டவனுக்கே அது உடைமையாகும். - மான்டெய்ன்[3]
  • உண்மையை அடைய விரும்பினால் உண்மைக்குரிய வழியில் சிறுகச் சிறுக முன்னேறிச் செல்க. - டாலர்[3]
  • மனிதன் பிறந்துள்ளது உண்மையைத் தேடவே. ஆனால் அதை அடையும் பாக்கியம் வேறொரு பெரிய சக்திக்கே உண்டு. - மான்டெய்ன்[3]
  • உண்மையைக் கண்டுபிடிப்பதே மனிதனுடைய மகோன்னதமான லட்சியம், உண்மையைத் தேடுவதே பரமோத்தமமான தொழில். அது அவனுடைய கடமையும் ஆகும். -எட்வர்ட் போப்ஸ்[3]
  • நம்பக்கம் உண்மையிருப்பது வேறு. நாம் உண்மையின் பக்கத்தில் இருக்க விரும்புவது வேறு. -லிட்வா[3]
  • எல்லா அம்சங்களிலும் உண்மையான உபதேச மொழிகள் சிலவே. - வாவனார் கூஸ்[3]
  • ஒன்றே உள்ளது. பல மாறி மறையும். விண்ணின் வெளிச்சம் என்றும் ஒளி தரும். மண்ணின் நிழல்கள் பறந்தோடிவிடும். - ஷெல்லி[3]
  • உண்மை உரைப்பதற்குச் சாத்தியமான ஒரே வழி கலைதான், அதுதான் கலையின் புகழும் நன்மையும் ஆகும். - ராபர்ட் பிரெளணிங்[3]
  • பொருள் சேர்ப்பதில் மட்டுமன்று புகழ் தேடுவதிலுங்கூட நாம் மரிக்கும் மனிதரே. ஆனால், உண்மையை நாடுவதில் நகம் அமரர். அழிவுக்கும் மாறுதலுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. -தோரோ[3]
  • பெரிய விஷயங்களைப் போலவே சிறிய விஷயங்களையும் கவனிக்கக்கூடிய மனமே உண்மையும் உரமும் பொருந்திய மனமாகும். -டாக்டர் ஜான்ஸன் [3]
  • ஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் ஆசை உண்டு என்பதற்கு அடையாளம். -கதே[3]
  • உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம். -கதே[3]
  • உண்மை ஒரு பெரிய தீவர்த்தி. அருகில் செல்ல பயந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே அதைக் கடந்து செல்கிறோம். -கதே[3]
  • தரையோடு தரையாய் நசுக்கப்பட்டாலும், சத்தியம் மறுபடியும் எழுந்து நிற்கவே செய்யும். ஆண்டவனுடைய அந்தமில்லா ஆண்டுகள் அதற்கும் உண்டு. -பிரையண்ட்[3]
  • சத்திய நெஞ்சுக்குள்ள ஒரே ஓர் அசெளகரியம் யாதெனில், எளிதாய் நம்பிக்கொள்ளும் தன்மையே. -ஸ்ர் பிலிப் லிட்னி[3]
  • எப்பொழுதும் சமர்க்களத்தில் அல்லது செயக் கொண்டாட்டத்தில் இருப்பவன் சத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருத்தல் துர்லபம். -கெளலி
  • நமக்கு ஆனந்தம் அளிக்கக் காரணமாய் இருப்பது எதையும் மாயை என்று கூற நியாயமே கிடையாது. -கதே[3]
  • உண்மையே தெய்வீகம் பொருந்தியது. சுதந்திரம் இரண்டாவது ஸ்தானம் பெறும். உண்மை உணர்வதற்குச் சுதந்திரம் அவசியமானாலும் சுதந்திரத்தோடு உண்மை சேராவிடில், சுதந்திரத்தால் ஒரு பயனும் உண்டாகாது. -மார்லி[3]
  • முரணில்லாதிருக்க முயல்க. உண்மையாயிருக்க மட்டுமே உழைத்திடுக. -ஹோம்ஸ்[3]
  • அதிகமான ஜனங்கள் நம்புகிறார்களா? அப்படியானால் அவ்வளவுக் கவ்வளவு அதிக ஜாக்கிரதையாக அந்த விஷயத்தை ஆராய்தல் அவசியம்.-லியோ டால்ஸ்டாய்[3]
  • உயிரளிக்கும் உண்மையினின்று நம்மைப் பிறழச் செய்யும் சகப் பொய்கள் நாசமாய் ஒழிக! -டெனிஸன்[3]
  • ஏதேனும் ஓர் உண்மையைத் தள்ளி மிதித்து விட்டால், அது சமாதான மொழியாயிருப்பதற்குப் பதிலாகச் சமர் தொடுக்கும் வாளாய் மாறிவிடும். -ஹென்றி ஜார்ஜ்[3]
  • 'சடங்கு' -அதன் அடியார் குழாங்கள் உபயோகமற்ற நிழல்களுக்காக உயில் துறக்க எப்பொழுதும் தயார் 'உண்மை' - அழியா விஷயங்களின் அன்னை. ஆயினும் அதற்கு ஒரு நண்பனைக் காண்பது அரிது. -கூப்பர்[3]
  • உண்மையாக இருக்கத் துணிக. ஒன்றிற்கும் பொய் வேண்டியதில்லை. பொய்யை விரும்பும் குற்றம் அதனாலேயே இரண்டு குற்றமாய்விடும். -ஹெர்பர்ட்[3]
  • சுருதிக்காக அறிவை அகற்றுபவன் இரண்டின் ஒளியையும் அவிப்பவனாவான். அவன் செயல், க்ண்ணுக்கு எட்டா நட்சத்திரத்தைத் தூர திருஷ்டிபக் கண்ணாடி வழியாய்த் தெளிவாய்ப் பார்ப்பதற்கு என்று கண்களை அவித்துக் கொண்டது போலாகும். -லாக்[3]
  • தவறு ஒன்றுதான் சர்க்கார் தயவை வேண்டும். உண்மைக்கு அது வேண்டியதில்லை. -தாமஸ் ஜெவ்வர்ஸன்
  • எந்தப் பொய்யும் வயோதிகம் அடையும் வரை வாழ்ந்ததில்லை. -ஸோபோகிளீஸ்[3]
  • முதலில் தூசியைக் கிளப்பி விடுகிறோம். பின்னால் பார்க்க முடியவில்லை என்று முறையிடுகிறோம். -பிஷப் பார்க்லி[3]
  • மெய்யும் பொய்யும் கை கலக்கட்டும். பகிரங்கமாகக் கை கலந்து போர் புரியின், என்றேனும் மெய் தோல்வியடைந்ததைக் கண்டவர் உளரோ? - மில்டன்[3]
  • பாவத்திற்குப் பல கருவிகள் உண்டு. ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைபிடி பொய். -ஹோம்ஸ்[3]
  • பொய்யானவற்றால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது. -ஹொரேஸ்[3]
  • முதலில் ஒரு குற்றம் செய்தவன் அதை மறைக்கப் பொய்யுரைக்கும் பொழுது இரண்டு குற்றங்கள் செய்தவனாகிறான். -வாட்ஸ்[3]
  • முதலில் பொய்யாய்த் தோன்றுவது எல்லாம் பொய்யாகி விடா. -ஸதே[3]
  • பிழை செய்தால் பிறர் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொய்கூறினால் பிறர் கண்டுகொள்ள முடியாது. -கதே[3]
  • பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும். பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும். -ரிக்டர்[3]
  • முழுப் பொய்யோடு முழு வல்லமையுடன் போர்புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர்புரிதல் கஷ்டமான காரியம். -டெனிஸ்ன்[3]
  • மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது. -ஸிட்னி ஸ்மித்[3]
  • சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை. -ஸிட்னி ஸ்மித்[3]
  • நேர்மையான, மனசாட்சியான மனிதனைப் பார்க்கும்போது, அவன் ஒழுக்கத்தை நீங்களும் பெறுங்கள்; வாழ முயலுங்கள்; தீயவனை காணும்போது உங்களுடைய தவறுகளை நீங்களும் அகற்றி விடுங்கள். -கான்பூசியசு[4]
  • உண்மையை விரும்புபவன், அதை அறிந்தவனைவிட சிறந்தவனாகிறான்; அதை விரும்புபவனைவிட உண்மையில் மகிழ்ச்சி காண்பவன் உத்தமமான உயர்ந்த மனிதன் ஆகிறான்! -கான்பூசியசு[4]
  • ஒவ்வோருவரும் உண்மையே சொல்லுவார்களானால் அந்த உண்மைக்குரிய மதிப்பே போய்விடும்! -நிக்கோலோ மாக்கியவெல்லி[5]

மகாவீரர்[தொகு]

  • உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.
  • உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.

பழமொழிகள்[தொகு]

  • உண்மையே ஞானத்தின் உறைவிடம்.[3]
  • மனிதனுடைய முதல் மொழி 'ஆம்' இரண்டாவது 'அன்று'; மூன்றாவதும் இறுதியானதும் 'ஆம்'. பலர் முதலாவதோடு நின்று விடுவர்; வெகு சிலரே இறுதி மொழிவரை செல்வர்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Merriam-Webster's Online Dictionary, truth, 2005
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 3.24 3.25 3.26 3.27 3.28 3.29 3.30 3.31 3.32 3.33 3.34 3.35 3.36 3.37 3.38 3.39 3.40 3.41 3.42 3.43 3.44 3.45 3.46 3.47 3.48 3.49 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. 4.0 4.1 என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  5. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் உண்மை என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உண்மை&oldid=37077" இலிருந்து மீள்விக்கப்பட்டது