உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகுமார்

விக்கிமேற்கோள் இலிருந்து

சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • சினிமாக்காரன், படத்துல நல்லவனா தான் நடிக்கிறான்னு ரசிகனுக்குத் தெரியும். இருந்தாலும் அவனை நம்புவான். ரசிகனோட இந்த அறியாமை இருக்குற வரைக்கும் தான் சினிமாக்காரனோட பொழப்பு ஓடும்.[1]
  • அதிர்ஷ்டத்தால் உயர்ந்தவன்தான் அஞ்சி நடுங்க வேண்டும். திறமையால் உயர்ந்தவன் என்றும் திடமாகத்தான் இருப்பான்.[2]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • நடிப்புக்கு இலக்கணமும் அகராதியும் சிவாஜி என்றால், ஒரு நடிகனுக்கு இலக்கணமும் அகராதியும் சிவகுமார் என்ற சொல்வதிலே இரு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. - சிவகுமாரைப் பற்றி கைலாசம் பாலசந்தர். [2]
  • அரக்குவேலியில் படப்பிடிப்பில் இருந்த போது, ராத்திரில அவரோட துணைவியைப் பத்தி எழுதின கட்டுரையைப் படிச்சு அழுதேன். பதினாலு வருஷம் கழிச்சு, பொண்டாட்டி பிறந்த நாளைக் கண்டுபிடிச்சு, புடவை வாங்கிக் குடுத்தாரு. இன்னிக்கு பொறந்த நாளு - கட்டிக்கன்னு... 'என் பொறந்த நாளு எனக்கே தெரியாது. ஏன் பொறந்தோம்னு நினைக்கிற நாளைப்பத்தி நான் என்னிக்குமே நினைக்கறதில்லை. இதெல்லாம் கொண்டாடக்கூடிய நாளா? புடவையெல்லாம் வேண்டாம்' என்று மறுத்தார்... இதைப் படித்த போது விக்கி விக்கி அழுதேன். - "இது ராஜபாட்டை அல்ல" புத்தக வெளியீட்டு விழாவில் மனோரமா அவர்கள் கூறியது.[2]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
  1. நான் ரெண்டாம் கட்ட ஹீரோ தான் – மனம் திறந்தார் நடிகர் சிவக்குமார் (4 ஜீலை 2014). Retrieved on 27 மே 2016.
  2. 2.0 2.1 2.2 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 436. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிவகுமார்&oldid=36750" இலிருந்து மீள்விக்கப்பட்டது