உள்ளடக்கத்துக்குச் செல்

எசுப்பானிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இந்தப் பக்கத்தில் எசுப்பானிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

பழமொழிகள்

[தொகு]
  • அடுப்படியிலேயே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன்.
  • அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.
  • அழகுள்ள விதவையை (விரைவில்) விவாகம் செய்து வைக்க வேண்டும், அல்லது புதைக்க வேண்டும், அல்லது கன்னிகா மடத்தில் அடைத்து வைக்க வேண்டும்.
  • ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர்.
  • என் வீட்டுக்கு நானே ராஜா.
  • ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும்.
  • ஒரு மனிதனின் அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் மனைவிதான்.
  • ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது.
  • ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே
  • ஒவ்வொரு பிணிக்கும் வைத்தியரை நாடவேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வக்கீலை நாட வேண்டாம்.
  • ஒவ்வொரு வீடும் ஓர் உலகம்.
  • உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே.
  • உன் கணவனை ஒரு நண்பனைப் போல நேசி, ஆனால் பகைவனைப் போல எண்ணி அவனுக்கு அஞ்சி நட.
  • உன் மகளுக்குத் தக்க வரன் வந்தால், வெளியே போயிருக்கும் அவளுடைய தந்தையின் வரவைக்கூட எதிர்பார்க்க வேண்டாம்.
  • உன் மனைவி உன்னை ஒரு கூரையிலிருந்து குதிக்கச் சொன்னால், 'கடவுளே, அது தணிந்த கூரையா யிருக்கட்டும்!' என்று பிரார்த்தனை செய்து கொள்.
  • என் வீட்டில் நானே அரசன்.
  • எந்தத் தாயரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை.
  • ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான்.
  • ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது.
  • ஒரு மகனோடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல்.
  • ஒருவனுக்குக் கடவுள் சொந்தப் பிள்ளைகளைக் கொடுக்கா விட்டால், சயித்தான் அவனுக்கு அவனுடைய சகோதரர் பிள்ளைகளைக் கொடுக்கிறான்.
  • கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம்.
  • கணவனைத் தெரிந்துக்கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள்.
  • கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல்.
  • காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர்.
  • காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை.
  • காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும்.
  • காதலுக்காகக் கலியாணம் செய்து கொள்பவன் துக்கத்தோடு வாழ வேண்டும்.
  • காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும்.
  • காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.
  • கிழவனுக்குத் தண்ணீர் இறங்கவில்லையானால், சமாதியைத் தயாரிக்கலாம்.
  • கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள்.
  • கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை.
  • சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.
  • 'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது.
  • செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல.
  • சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும்.
  • தலையில் வலி யெடுத்தால், மூட்டில் தைலம் தடவு.
  • தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும்.
  • தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள்.
  • திருமணம் என்ற கோணியில் தொண்ணூற் றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும்.
  • திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டவன் அண்டை அயலார்களைப் பார்த்துக் கொள்வது நல்லது.
  • திருமணம் செய்து கொண்டு அடங்கிக்கிட.
  • தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை
  • நடனத்தின் இசை நடுவிலும், தாய்க்குத் தன் குழந்தை களின் அழுகுரலே கேட்கும்.- ஜெர்மனிதாய்ப் பாலுடன் பருகியது சாகும் வரை உடலில் இருக்கும்.
  • நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும்.
  • நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில், அவன் துரோகம் செய்ய மாட்டான்.
  • நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.
  • நோயைக் கண்டுபிடித்தலே ஆரோக்கியத்திற்கு ஆரம்பம்
  • பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்.
  • மரணம் குட்டிகளையும், ஆடுகளையும் சேர்த்து விழுங்குகின்றது.
  • மரணம்தான் கடைசி வைத்தியர்.
  • மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான்.
  • மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்கிறான்.
  • மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
  • மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள்.
  • விவாகமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்திதான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
  • விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எசுப்பானிய_பழமொழிகள்&oldid=38038" இலிருந்து மீள்விக்கப்பட்டது