எசுப்பானிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

எசுப்பானியா (Spain, i/ˈspeɪn/ ஸ்பெயின்-'; எசுப்பானியம்: España, [esˈpaɲa] ) என்றழைக்கப்படும் எசுப்பானியா இராச்சியம் (Kingdom of Spain, எசுப்பானியம்: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.

பழமொழிகள்[தொகு]

 • அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.
 • ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர்.
 • ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான்.
 • கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம்.
 • கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல்.
 • கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள்.
 • கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை.
 • சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும்.
 • தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும்.
 • தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள்.
 • நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும்.
 • நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில், அவன் துரோகம் செய்ய மாட்டான்.
 • பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்.
 • மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள்.


வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=எசுப்பானிய_பழமொழிகள்&oldid=36732" இருந்து மீள்விக்கப்பட்டது