ஹென்றி போர்டு
Appearance
ஹென்றி போர்டு (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான்.
- உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே.
- நான் சீர்திருத்தக்காரனல்ல. தற்போது உலகில் சீர்திருத்தஞ் செய்வதிலும், சீர்திருத்தக்காரர்களின் வேலையிலும் அதிக கவனஞ் செலுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தக்காரரில் இருவகை வர்க்கம் இருக்கிறது. இரண்டு பேரும் பெரிய உபத்திரவம்தான். சீர்த்திருத்தஞ் செய்வதாக வெளி கிளம்புகின்றவர்கள் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டு மென்கிறார்கள். வீட்டின் படி சிறியதாயிருக்கிறதென்று வீட்டையே இடித்துத் தள்ள வேண்டுமென்று இவர்கள் சொல்லுவார்கள். படியை மட்டும் பெரிதாகச் செய்யலாமென்ற யோசனையே இவர்கள் மூளைக்கு எட்டாது. இவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிரறோம் என்பதே புலப்படுகிறதில்லே. அனுபவம் என்பதே இவர்களுக்குக்கிடையாது. அனுபவத்தில் தென்படும் உண்மைகள் இவர்களுடைய கண்களுக்குத்தெரியாது.[1]
- மனித சமூகத்திற்கு உண்மையாக நன்மை செய்ய வேண்டுமென்று ஒருவன் விரும்பினால், அவன் மனிதர்களை அவர்களுடைய வேலையின்மூலமாகவே அணுகவேண்டும்.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 318-319. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.