சட்டம்

விக்கிமேற்கோள் இலிருந்து
சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு. ~ கா. ந. அண்ணாதுரை

சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருப்பதே சட்டத்தின் தனித்தன்மையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 • தனி மனிதன் எவ்வாறு தன் மனதை அடக்கிக் ஆள நோன்பு முதலியவற்றை மேற்கொள்கிறானோ அது போல் ஒரு சமுதாயம் தன் மனம் போன போக்கில் போகாமல் ஒழுங்காகக் கட்டுப்படுவதற்கு மேற்கொள்ளும் அரசியல் நோன்பு தான் சட்டம் என்பது.
 • வாழ்வின் அடிப்படைகளான நல்ல பண்புகளாகிய அன்பு, தொண்டு, அருள், நீதி முதலியவை வாழ வேண்டுமானால் சட்டம் வேண்டியது தான்.
  • மு. வரதராசனார்.
 • வெட்கத்திற்குப் புரிவது, சட்டத்திற்குப் புரியாது.
  • மாப்பாசான்
 • சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு.
 • எந்த நாட்டில் சட்டங்கள் இயற்றப்பட்டு அதற்குப் பின்னால் தண்டனைச் சக்தி இருக்கின்றதோ, அந்த நாட்டிற்குப் பெருமை இருக்காது. அந்நாடு எவ்வளவு பரந்த நாடாய் இருப்பினும் மிகச் சிறிய நாடு என்று தான் சொல்ல வேண்டும்.
  • வினோபாஜி.
 • ஒரு மனிதன் முறையாக அதை பயன்படுத்தினால் சட்டம், நல்லது.
  • டிமோதி
 • சட்டம் ஒரு அடிப்பகுதியில்லாத பள்ளம் ஆகும்.
  • ஜான் அர்புத்னாட்
 • சட்டத்தின் அலட்சியம் ஈர்ப்பு விதியை இடமாற்ற அனுமதிக்கிறது.
  • ஆர். ஏ. லஃபெர்ர்டி
 • சட்டத்தின் வெளிச்சம் சட்ட கல்லூரியின் வாசல் வரையே.
  • பெயர் வெளியிட விருப்பம் இல்லாதவர்
 • மிக ஆழ்ந்து படிந்துவிட்ட சமூகத் தீமைகளை வெறும் சட்டத்தால் நீக்கிவிட முடியாது. என்றாலும், அப்போதுதான் எடுத்துக் கொண்ட நோக்கத்திற்கு ஒருவேகம் கிடைக்கும்.
 • ஓர் ஆட்சியின் சட்டம், ஆணை, கட்டளை உத்தரவு மக்களுக்கு உகந்தவாறில்லாமல், தவறானதாக அமைந்தால், மகன் தந்தையையும், அமைச்சன் மன்னனையும் எள்ளளவு முனையும் அஞ்சாமல், தயங்காமல் எதிர்த்துப் போராடலாம்.
 • ஆட்சியிலே இருப்போரின் சட்டங்கள், மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். சட்டத்தை மீறினால் தண்டனை உறுதி என்ற அச்சம் மக்கள் உள்ளத்திலே பதியவைக்கும் சட்டங்களை அவர்கள் இயற்ற வேண்டும்.
 • இரண்டு வக்கீல்களுக்கிடையிலுள்ள வழக்காடுபவன். இரண்டு பூனைகளுக்கிடையில் அகப்பட்டுக்கொண்ட மீன் போலிருப்பான்.
 • சட்ட நடவடிக்கையில், செலவைத் தவிர மற்றது எதுவும் நிச்சயமில்லை.
  • எஸ். பட்லர்[3]
 • சட்டம் ஓர் எலிப்பொறி உள்ளே செல்வது எளிது; ஆனால், வெளியே வருவது கஷ்டம்.
  • பால்ஃபோர் [3]
 • சட்டத்தையும் மருந்தையும் அவசியம் ஏற்பட்டால்தான் உபயோகிக்க வேண்டும் இல்லாவிடில், உடல்கள் மெலிந்து போகும். பைகள் காலியாகிவிடும்.
  • குவார்லெஸ்[3]
 • சட்டங்கள் சிலந்திவலைகள் போன்றவை. அவைகளில் சிறு ஈக்கள் சிக்கிக்கொள்ளும். ஆனால், குளவிகளும் வண்டுகளும் வலைகளை அறுத்துக்கொண்டு ஓடிவிடும்.
  • ஸ்விஃப்ட்[3]
 • ஆங்கிலேயரின் சட்டங்கள் குற்றத்தைத் தண்டிக்கின்றன: சீனர்களின் சட்டங்கள் இன்னும் அதிகமாய்ச் செய்தின்றன, அவை நன்மையைப் பாராட்டிப் பரிசளிக்கின்றன.
 • சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களோ சட்டத்தை ஆட்சி செய்கின்றனர்.
  • கோல்டுஸ்மித்[3]
 • சட்டப்படியுள்ள ஏழை மனிதனின் உரிமையைப் போல, வலையில் தொங்கும் மீன் அதை விட்டு வெளியே வருதல் அபூர்வம்.
 • சட்டத்தின் பண்பு, இரக்கம்; கொடுங்கோலர்களே அதைக் கொடுமையாக உபயோகிப்பார்கள். -ஷேக்ஸ்பியர்[3]
 • ஒழுக்கமுறைபற்றி மக்களுடைய உணர்வே சட்டமாக அமைந்துள்ளது.
  • பிளாக்ஸ்டோன்[3]
 • நல்ல சட்டங்கள் நன்மை செய்வதை எளிதாக்குகின்றன. தவறு செய்வதைக் கடினமாக்குகின்றன.
  • கிளாட்ஸ்டன்[3]
 • சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் சமுதாயம் வாழ முடியாது. தீவிரமாகச் சட்டத்தை மீறி மேற்செல்பவர்கள் இல்லாமல் சமுதாயம் முன்னேறவும் முடியாது.
 • சட்டம் உன்னைக் குடியாமலிருக்கச்செய்ய முடியும். ஆனால், சட்டமில்லாமல் உன்னைக் குடியாமலிருக்கும்படி திருத்த அதனால் முடியாது.
 • ஒரு மனிதன் மாற்றவே முடியாத சட்டம் என்று ஒன்றைப்பற்றிப் பேசினால், அவனை மாற்றவே முடியாத மனிதன் என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.
 • ஆயுதங்களுக்கு நடுவே சட்டங்கள் மெளனமாக இருந்துவிடும்.
 • தவ்றான சட்டம் ஒன்றை நீக்குவதற்குச் சிறந்த முறை அதைக் கண்டிப்பாக அமல் நடத்துவது.
 • மக்களின் பாதுகாப்பு இறைவனின் சட்ட்ம்
  • ஜேம்ஸ் ஒட்டிஸ்[3]
 • அரசாங்கம் மிகவும் ஊழலாய்ப் போயிருந்தால், அப்போது சட்டங்கள் அளவுக்கதிகமாகும்.
 • சட்டம் மரணத்தைப் போலிருக்க வேண்டும். மரணம் எவரையும் விடுவதில்லை.
  • மாண்டெண்கியு[3]
 • சட்டம் தீரும் பொழுது கொடுங்கோல் தொடங்குகின்றது.
  • வில்லியம் பிட்[3]

பழமொழிகள்[தொகு]

 • பூனைக்காகப் பசுவை இழப்பது போன்றது வழக்காடல். - சீனப் பழமொழி[3]

குறிப்புகள்[தொகு]

 1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 2. 2.0 2.1 என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் சட்டம் என்ற சொல்லையும் பார்க்க.


"https://ta.wikiquote.org/w/index.php?title=சட்டம்&oldid=21903" இலிருந்து மீள்விக்கப்பட்டது