உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் எஃப். கென்னடி

விக்கிமேற்கோள் இலிருந்து
உலக அமைதியின் பொருட்டு நாம் தொடங்கியிருக்கும் பணி நூறு நாட்களில் முற்றுப்பெறாமல் போகலாம் ; ஆயிரம் நாட்களில் முற்றுப் பெறாமல் போகலாம் ; ஏன் ? நம் வாழ்நாளில்கூட முற்றுப் பெறாமல் போகலாம். இருப்பினும் இந்நற்பணியை நாம் துவக்கி வைப்போம்.

ஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy; மே 29, 1917 - நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • உலக அமைதியின் பொருட்டு நாம் தொடங்கியிருக்கும் பணி நூறு நாட்களில் முற்றுப்பெறாமல் போகலாம் ; ஆயிரம் நாட்களில் முற்றுப் பெறாமல் போகலாம் ; ஏன் ? நம் வாழ்நாளில்கூட முற்றுப் பெறாமல் போகலாம். இருப்பினும் இந்நற்பணியை நாம் துவக்கி வைப்போம்.
  • இது இடர்சூழ்ந்த உலகம் ; நிலையற்ற உலகம். இவ்வுலகில் எளிதாக வாழ்ந்துவிடலாம் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது.
  • எளியவர்கள் பாதுகாப்போடும், வலியவர்கள் நேர்மை யோடும் வாழத்தக்க அமைதியான புத்துலகம் ஒன்றைச் சமைக்க நம்மாலான பணியைச் செய்வோம்.
  • இன்று நடப்பது ஒரு கட்சியின் வெற்றிவிழாவன்று. மக்களின் உரிமை விழாவாகும். ஒன்றின் முடிவையும் மற்றென்றின் துவக்கத்தையும் குறிப்பிடும் விழாவாகும். மாறுதலேயும் புதுமையையும் வரவேற்கும் விழாவாகும்.
  • அதிகாரம் ஒருவனை அத்துமீறிய செயல்களில் ஈடு படுத்தும்போது, கவிதை அவனுடைய எல்லை எதுவென்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம் ஒருவனைக் குறுகிய புத்திக்காரனுக்கும் போது, கவிதை அவன் உள்ளத்தை விரிவடையச் செய்கிறது.
  • நான் கூறும் சமாதானம் மனித உரிமை பற்றிய சமாதானம் ; நான் குறிப்பிடும் உரிமை, போரினல் விளையும் அழிவைப் பற்றிய அச்சம் இல்லாமல் மக்களினம் வாழும் உரிமை. உயிரினங்கள் இயற்கை வழங்கியபடிகாற்றை உயிர்க்கும் உரிமை ; எதிர்கால மக்களினம் முழு உடல் நலத் தோடு வாழும் உரிமை.
  • மனித உரிமை அழியாமல் நிலைத்து நிற்க நாம் எந்தக் கடமையையும் ஏற்போம். எந்தத் துன்பத்தையும் பொறுத்துக்கொள்வோம். எந்த நண்பரையும் எதிர்ப்போம்.
  • முடிவை எதிர்பாராமல், எதிர்ப்புகளுக் கஞ்சாமல், இடர்களுக்கு உள்ளங் கலங்காமல் தன்னால் இயன்ற அளவு நேர்மைக்காகப் பாடுபடவேண்டும். அதுதான் மக்களினத்தின் அடிப்படை ஒழுக்கம்.
  • நாம் ஏன் சந்திரனுக்குப் போக வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். சந்திரன் அல்ல நமது குறி, விண்வெளியை நான் ஒரு முக்கியமான கடலாகக் கருதுகிறேன்.— (13 - 3 - 1962)[1]

சான்றுகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_எஃப்._கென்னடி&oldid=18802" இலிருந்து மீள்விக்கப்பட்டது