உள்ளடக்கத்துக்குச் செல்

மனைவி

விக்கிமேற்கோள் இலிருந்து

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் பெண் அவளை மணந்து கொண்ட ஆணுக்கு மனைவி என்ற உறவு முறையினள் ஆகின்றாள்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மனைவி, ஒரு நல்ல நிதிமந்திரி, எங்கிருந்தோ பணம் வந்து குவியப் போகிறது என்று மனக்கோட்டை கட்டாமல், கணவனின் வரவுக்குத் தக்கபடி செலவு செய்கிறாள். தன்னுடைய மக்களுக்குக் கல்யாணப் பேச்சு நடத்துகிறாள். இந்த விஷயத்தில் மனைவி நிதிமந்திரி மட்டுமல்ல, சரியான உள்நாட்டு மந்திரி கூட.
  • எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவியிடம் யோசனை கேட்க கணவன் ஓடத்தான் வேண்டியிருக்கிறது.
  • உலகில் நாம் அடையக்கூடிய பொருள்களுள் நல்ல மனைவியே தலைசிறந்த பொருள் தீயவள் மனித வாழ்க்கைக்கு ஒரு சாபத்தீடு. - ஸிகிமோனைட்ஸ்[3]
  • சுவர்க்கத்தில் நான் என் மனைவியைச் சந்திக்காவிட்டால், எனக்கு அது சுவர்க்கமாகாது. - ஆன்ட்ரூ ஜாக்சன்[3]

சான்றுகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 303. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மனைவி&oldid=35611" இலிருந்து மீள்விக்கப்பட்டது