மனைவி
Appearance
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் பெண் அவளை மணந்து கொண்ட ஆணுக்கு மனைவி என்ற உறவு முறையினள் ஆகின்றாள்.
மேற்கோள்கள்
[தொகு]- மனைவி, ஒரு நல்ல நிதிமந்திரி, எங்கிருந்தோ பணம் வந்து குவியப் போகிறது என்று மனக்கோட்டை கட்டாமல், கணவனின் வரவுக்குத் தக்கபடி செலவு செய்கிறாள். தன்னுடைய மக்களுக்குக் கல்யாணப் பேச்சு நடத்துகிறாள். இந்த விஷயத்தில் மனைவி நிதிமந்திரி மட்டுமல்ல, சரியான உள்நாட்டு மந்திரி கூட.
- வி. வி. கிரி (29.6.1960)[1]
- எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவியிடம் யோசனை கேட்க கணவன் ஓடத்தான் வேண்டியிருக்கிறது.
- வி. வி. கிரி (29 - 6 - 1960)[2]
- உலகில் நாம் அடையக்கூடிய பொருள்களுள் நல்ல மனைவியே தலைசிறந்த பொருள் தீயவள் மனித வாழ்க்கைக்கு ஒரு சாபத்தீடு. - ஸிகிமோனைட்ஸ்[3]
- சுவர்க்கத்தில் நான் என் மனைவியைச் சந்திக்காவிட்டால், எனக்கு அது சுவர்க்கமாகாது. - ஆன்ட்ரூ ஜாக்சன்[3]
சான்றுகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 3.0 3.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 303. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.