இதழ்
Appearance
இதழ் அல்லது சஞ்சிகை (Magazine) என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- வெட்டுக்கிளிக்குப் பயந்து, விவசாயத்தை நிறுத்திவிட முடியாது. பொழுது போக்கு ஏடுகளே, இன்று ஏராளமாக விற்பனையாகின்றன என்பதற்காக, எப்போதும் பயன்தரக்கூடிய இலக்கிய ஏடுகளையோ, காயம் படாத கவிதை இதழ்களயோ நடத்தாமல் நிறுத்திவிட, முடியாது-நிறுத்தி விடவும் கூடாது. —சுரதா (1-12-1 974)[1]
- விலங்குகளிடம் அன்பாயிரு என்றால், புலியை முத்தமிடு என்று அர்த்தமல்ல. அதுபோல, ஓர் இலக்கிய இதழ் என்றாலே. அவ்விதழில்-செத்துப்போன நூற்றாண்டுகளின் சிந்தனைகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதல்ல. இன்றைய உலகின் சத்தங்களும், இருட்டறை முத்தங்களும் அதில் இடம் பெறலாம். சுரதா[2]
- கடவுள் உலகை எப்படி ஆண்டு வருகிறார் என்பதைப் பார்க்க நான் பத்திரிகைகளைப் படிக்கிறேன். - ஜான் நியூட்டன்[3]
- சாதாரண மக்களுக்குப் பத்திரிகைகளே பள்ளி ஆசிரியர்கள். -பீச்செர்[3]
- இந்தக் காலத்தில் நாம் கருத்துகளுக்காகப் போராடுகிறோம். பத்திரிகைகள் நமது கோட்டைகள். -ஹீய்ன்[3]
- பத்திரிகைகள் மக்களின் பல்கலைக் கழகம் பாதி மக்கள் வேறு எதையும் படிப்பதில்லை. -ஜே. பார்டன்[3]
- நவீன உலகின் முதன்மையான ஆச்சரியங்களுள் ஒன்று பத்திரிகை. -. ஜே. ஏ. பிரோடஸ்[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.