உள்ளடக்கத்துக்குச் செல்

இதழ்

விக்கிமேற்கோள் இலிருந்து
இதழ்கள் விற்பனை செய்யப்படுகிறன்றன.

இதழ் அல்லது சஞ்சிகை (Magazine) என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • வெட்டுக்கிளிக்குப் பயந்து, விவசாயத்தை நிறுத்திவிட முடியாது. பொழுது போக்கு ஏடுகளே, இன்று ஏராளமாக விற்பனையாகின்றன என்பதற்காக, எப்போதும் பயன்தரக்கூடிய இலக்கிய ஏடுகளையோ, காயம் படாத கவிதை இதழ்களயோ நடத்தாமல் நிறுத்திவிட, முடியாது-நிறுத்தி விடவும் கூடாது. —சுரதா (1-12-1 974)[1]
  • விலங்குகளிடம் அன்பாயிரு என்றால், புலியை முத்தமிடு என்று அர்த்தமல்ல. அதுபோல, ஓர் இலக்கிய இதழ் என்றாலே. அவ்விதழில்-செத்துப்போன நூற்றாண்டுகளின் சிந்தனைகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதல்ல. இன்றைய உலகின் சத்தங்களும், இருட்டறை முத்தங்களும் அதில் இடம் பெறலாம். சுரதா[2]
  • கடவுள் உலகை எப்படி ஆண்டு வருகிறார் என்பதைப் பார்க்க நான் பத்திரிகைகளைப் படிக்கிறேன். - ஜான் நியூட்டன்[3]
  • சாதாரண மக்களுக்குப் பத்திரிகைகளே பள்ளி ஆசிரியர்கள். -பீச்செர்[3]
  • இந்தக் காலத்தில் நாம் கருத்துகளுக்காகப் போராடுகிறோம். பத்திரிகைகள் நமது கோட்டைகள். -ஹீய்ன்[3]
  • பத்திரிகைகள் மக்களின் பல்கலைக் கழகம் பாதி மக்கள் வேறு எதையும் படிப்பதில்லை. -ஜே. பார்டன்[3]
  • நவீன உலகின் முதன்மையான ஆச்சரியங்களுள் ஒன்று பத்திரிகை. -. ஜே. ஏ. பிரோடஸ்[3]

குறிப்புகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=இதழ்&oldid=24387" இலிருந்து மீள்விக்கப்பட்டது