நலம்
Appearance
நலம் அல்லது ஆரோக்கியம் (Health) என்பது நோய் இன்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமன்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும் என்று, 1948ல் உலக சுகாதார அமைப்பு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ஆரோக்கியமில்லாத வாழ்க்கை வாழ்வன்று. அது அயர்வும் தும்ன்பமும் நிறைந்ததாகும். அது மரணத்தின் நிழல் -ராபவே[1]
- உங்களுடைய ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்; அதைப் புறக்கணிக்க உங்களுக்கு உரிமை கிடையாது புறக்கணித்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சுமையாகி விடுவீர்கள். ஒரு வேளை, பிறருக்கும் பாரமாயிருப்பீர்கள் உங்களுடைய உணவு சாதாரணமாயிருக்கட்டும்; ஒருபோதும் அமிதமாக உண்ண வேண்டாம்; போதிய உடற்பயிற்சி செய்யவும்; எல்லா விஷயங்களையும் முறையாகச் செய்யவும் உடல் நலமில்லையானால், மீண்டும் நலமடையும்வரை உபவாசமாயிருக்கவும். இப்படி வாழ்ந்தால் கவலை உங்களை அண்டாது. மருந்துகளை நாய்களுக்குக் கொட்டிவிடலாம். -டபுள்யு ஹால்[1]
- ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வது ஒழுக்க முறையிலும் சமய முறையிலும் கடமையாகும். ஏனெனில், உடல் நலமே சமூக ஒழுக்க முறைகளுக்கும் அடிப்படையானது. உடல் நலமில்லாதபோது நாம் யாருக்கும் பயன்பட முடியாது. -ஜான்ஸன்[1]
- வாழ்க்கை வாழ்வதற்கன்று. ஆரோக்கியமாக இருப்பதற்கே. - மார்ஷியல்[1]
- ஆரோக்கியத்திற்கும். நீண்ட கால வாழ்வுக்கும் அவசியமானவை மதுவை விலக்குதல், திறந்த வெளியிலுள்ள காற்று. எளிதில் செய்யக்கூடிய வேலை. கவலையின்மை ஆகியவை. -ஸர் பி. ஸிட்னி[1]
- மகிழ்ச்சி, மிதமான உணவு, போதிய ஒய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா. - லாங்ஃபெல்லோ[1]
- ஆரோக்கியத்தைப்பற்றி இன்னும் அறிய வேண்டியவை ஏராளமாயுள்ளன. ஆயினும் இதுவரை சிலருக்கு மட்டும் தெரிந்துள்ள விஷயங்கள் எல்லா மக்களுக்கும் தெரிந்திருந் தால், நம் சராசரி வயது இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் கூடக்கூடும். - ஜே. பி. எஸ். ஹால்டேன்[1]
- முறையான உணவும், பழக்கங்களும் மருந்தைவிட மேலானவை. ஒவ்வொருவரும் தமக்குத் தாமே மருத்து வராயிருக்க வேண்டும். நாம் இயற்கைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர, அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உங்கள் உடல்நிலைக்கு ஒத்துவரக்கூடிய உணவுகளை நிதானமாக உண்ணவும். நாம் சீரணித்துக்கொள்ள முடியாதது எதுவும் உடலுக்கு நல்லதன்று. ஜீரண சக்தியை அளிக்கக்கூடியது எது? உடற்பயிற்சி, வலிமையளிப்பது எது? உறக்கம். தீர்க்க முடியாத நோய்களையும் குறைக்கக்கூடியது எது? பொறுமை, - வால்டேர்[1]
- இந்தக் காலத்தில் தோன்றும் பிணிகளில் பாதி, உடலைக் கவனியாமல், மூளையால் அதிக வேலை செய்வதாகும். - புல்வெர்[1]
- ஆரேக்கியமிருந்தால்தான் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க முடியும். இல்லையெனில், அவை ருசியில்லாமல் வாடிவிடும்[1]
- மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. - திருவள்ளுவர்- (மூன்று வாதம், பித்தம், சிலேத்துமம்)[1]
- அற்றால், அளவு அறிந்து உண்க. -திருவள்ளுவர்[1]
பழமொழிகள்
[தொகு]- ஆரோக்கியமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும் நம்பிக்கை யுள்ளவனுக்கு எல்லாம் இருக்கும். - அரபுப்பழமொழி[1]
- நோயற்ற வாழவே குறைவற்ற செலவம்.