ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (பெப்ரவரி 27, 1807 – மார்ச் 24, 1882 Henry Wadsworth Longfellow) என்பவர் ஒரு உலகப்புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

ஆணவம்[தொகு]

  • கர்வமானது குதிரையின் மேல் கம்பீரமாகச் சவாரி செய்துகொண்டு போகும். ஆனால் கால் நடையாகத்தான் திரும்பி வரும். வழி நெடுகப் பிச்சை எடுக்கவும் செய்யும்.[1]

ஆன்மா[தொகு]

  • அறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே.[2]

சான்றோர்[தொகு]

  • பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.
    சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.