உள்ளுணர்வு
Appearance
உள்ளுணர்வு (Intuition) என்பது ஒரு அனுமானம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- விலங்குகளுக்குள்ள இந்த இயற்கை அறிவுக்கு மேலாக இயற்கையில் காணும் அறிவு கடந்த விஷயம் எதுவுமில்லை என்பது என் கருத்து. இந்த உணர்வு பகுத்தறிவுக்கு மேலே தோன்றுவது. ஆயினும், அதைவிட மிகவும் தாழ்ந்தது. -அடிஸன்[1]
- பகுத்தறிவு முன்னேறி வளர்வது இயற்கை அறிவு நிலையாக நிற்பது. ஐயாயிரம் ஆண்டு காலமாகத் தேனீயின் கூட்டில் எவ்வித அபிவிருத்தியுமில்லை; நீர்நாயின் வீட்டிலும் மாறுதலில்லை. - கோல்டன்[1]
- அபிவிருத்தியடையக்கூடிய பகுத்தறிவே மனிதனுக்கும் விலங்குக்குமுள்ள வேற்றுமை. டி. பின்னி[1]
- பெருமை மிகுந்த ஒரு சமூக மக்களின் உள்ளுணர்வு அவர்களுடைய தலைசிறந்த அறிவாளர்களைவிட மேலான ஞானத்தைப பெற்றிருக்கிறது. -கோஸத்[1]
- இயற்கை அறிவுக்கு மேலாகப் பகுத்தறிவை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள்; முதலாவதில் கடவுள் வழிகாட்டுகிறார்; இரண்டாவதில் மனிதன் வழி காட்டுகிறான். - போப்[1]