அலெக்சான்டர் போப்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Alexander Pope by Michael Dahl.jpg

அலெக்சான்டர் போப் ( (21 May 1688 – 30 May 1744) பதிணெட்டாம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆங்கிலக் கவிஞர்களுள் ஒருவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

 • இனிமைகள் கண்ணைக் கவரும்,திறமையோ ஆன்மாவை ஈர்க்கும்.

அன்பு[தொகு]

 • வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக! இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது; கடன், கடமை, மனிதநேயம்.[1]
 • பிறர் நலம் கண்டு மகிழமாட்டார்கள் யார்? பிறர் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி இரங்கமாட்டார்கள்! யார்? அவர்கள்தான் அன்பிலார்! அவர்கள் எல்லாரும் இறந்து படுக.[1]

அறிவு[தொகு]

 • தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. ஆம், ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. இது முக்காலும் உண்மை.[2]

அறிவீனம்[தொகு]

 • தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர்.[3]

ஆணவம்[தொகு]

 • கர்வம்-அதுதான் முட்டாள்களை விட்டு ஒரு பொழுதும் நீங்காத துர்க்குணம்.[4]

உண்மை[தொகு]

 • கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே,[5]

கொள்கை வெறி[தொகு]

 • சமயவெறி கொண்டார். கொள்கை முறைகள் குறித்துச் சண்டையிடட்டும். வாழ்வைச் சரியாக நடத்தினால் கொள்கை தவறாய்விட முடியாது.[6]

மதம்[தொகு]

 • அறிவில்லாத சமயவாதிகள் சமயக் கொள்கைகளுக்காகச் சண்டையிடட்டும். ஆனால் தர்ம வழியில் நடப்பவன் ஒருநாளும் தவறியவனாகான்.[7]

மன நிறைவு[தொகு]

 • எதிர் பார்ப்பவன் ஏமாந்து போகலாம், அதனால் எதிர் பாராதவனே பாக்கியசாலி.[8]

முகத்துதி[தொகு]

 • தகுதியில்லாப் புகழுரை மாறுவேஷம் பூண்ட பழியேயாகும்.[9]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
 2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=அலெக்சான்டர்_போப்&oldid=16823" இருந்து மீள்விக்கப்பட்டது