பேரறிவாளர்

விக்கிமேற்கோள் இலிருந்து

பேரறிவாளர் என்பவர் அறிவில் சிறந்தவர் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • பேரறிவு இடைவிடாத கவனத்தின் மூலம் அமைவதைத் தவிர வேறில்லை. - ஹெல்விடியஸ்[1]
  • பேரறிவு என்பது எனக்குத் தெரியாது; அது உழைப்பும் ஊக்கமுமேயாகும். - ஹோகார்த்[1]
  • பார்வையிலேயே விசேடத் திறமையுடன் பாாக்கும் உயர்ந்த ஆற்றலே பேரறிவு - ரஸ்கின்[1]
  • பேரறிவாளர் தமக்கு வேண்டிய பாதைகளைத் தாமே அமைத்துக் கொள்வர். தமக்கு வேண்டிய தீபத்தையும் தாமே எடுத்துச் செல்வர். - வில்மா[1]
  • பேரறிவாளர் பிறவியிலேயே அப்படியிருப்பவர் அவர்களைப் போதனை செய்து தயாரிக்க முடியாது. - டிரைடன்[1]
  • பேரறிவாளனுடைய முதற்கடமையும், கடைசிக் கடமையுமாவது உண்மையில் பற்றுக்கொண்டிருத்தல். - கதே[1]
  • அறிவைப் பெற்றுக்கொண்டு. அதை அபிவிருத்தி செய்து கொள்வதே பேரறிவாளனின் திறமை. ஜி. எலியா[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286-287. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பேரறிவாளர்&oldid=35174" இலிருந்து மீள்விக்கப்பட்டது