ஜான் ரஸ்கின்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஜான் ரஸ்கின் (1875)

ஜான் ரஸ்கின் (John Ruskin) (8 பிப்ரவரி 1819 – 20 சனவரி 1900) விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார், கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

அன்பு[தொகு]

  • பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும்.[2]
  • அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால்.[2]
  • அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்.[2]

அறம்[தொகு]

  • எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு.[3]

அறிவு[தொகு]

  • ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல்.[4]
  • கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும், தடுக்கமுடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும். [4]
  • அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது. [4]
  • தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞ்ஞானத்தின் இலட்சணம்.[4]
  • அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான்.[4]
  • யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே. ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டுவைக்கக் கூடாது.[4]
  • சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா, அல்லது வானத்தைக் காண்பதா? -உன் இஷ்டம்.[4]
  • மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும், ஜீவர்களிடம் அன்பையும், தன்னிடம் அறிவையும் உண்டாக்கும்.[4]
  • ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது.[4]

ஆன்மா[தொகு]

  • உழைப்பை மட்டுமே விற்கலாம். ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது.[5]

இசை[தொகு]

  • அழகான உடையும் சத்தான உணவும் நல்ல இசையும் வாழ்வின் ஊற்றாகவும் அறத்தின் சாதனமாகவும் ஆக்கப் பெற்றவை. ஆனால் சாத்தான் அவற்றைக் குற்றம், அலங்கோலம், மரணம் ஆகியவற்றின் சாதனங்களாகச் செய்துவிடுகிறான்.[6]

இலட்சியம்[தொகு]

  • எந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்? என்னும் கேள்வியே.[7]
  • முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும்.[7]

இளமை[தொகு]

  • வழக்கங்கள். நம்பிக்கைகள். உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமை, [8]

ஈகை[தொகு]

  • ஈகையைச் செய்யும் போது விளையும் பயன் குறித்து; நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி.[2]

உண்மை[தொகு]

  • அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்தா. ஆனால், உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது; எந்தக் குறையையும் பொறுக்காது.[9]
  • உண்மை பேசல் அழகாய் எழுதுவதை ஒக்கும். பழகப் பழகவே கைகூடும். ஆசையைவிடப் பழக்கத்தையே பொறுத்ததாகும்.[9]
  • ஏன் உண்மையாய் நடக்க வேண்டும்?- இந்தக் கேள்வி மூலமே இகழ் தேடிவிட்டாய்- 'மனிதனாயிருப்பதால்' என்பதே அதற்கு மறுமொழி.[9]

உதவி[தொகு]

  • "உதவி செய்க" என்பதே உலகின் உயர்ந்த ஆதி விதி. அதுவே வாழ்வுக்கு மறுபெயர். மரணத்துக்கு மறுபெயர் "பிரிந்திரு" என்பதே.[10]

உழைப்பு[தொகு]

  • வேலை செய்யாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழக்கூடாது என்று ஆண்டவன் விரும்புகிறான். அதே போல. ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் இன்புற்றிருக்கவேண்டும் என்றும் அவன் விரும்புகிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது.[11]

கல்வி[தொகு]

  • கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதே யாகும்.[12]
  • மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.[12]
  • எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுத்து, எண்ணை மறத்துக்கும் எழுத்தைக் காமத்துக்கும் உபயோகிக்க விட்டுவிடுவது கல்வி யாகாது. ஆக்கைக்கும் ஆன்மாவுக்கும் பரிபூரணமான பயிற்சி தந்து அவற்றை அடக்கியாளக் கற்பிப்பதே கல்வி.[12]
  • கல்வியின் லட்சியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதன்று; நல்ல காரியங்களைச் செய்வதில் ஆசையும் ஆநந்தமும் உண்டாக்குவதேயாகும்.[12]
  • கல்வியின் லட்சியம் விஷயங்களை அறிவது அன்று, வேலைக்கு அடிகோலுவது மன்று, சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும்.[12]
  • சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும்.[12]
  • நடை எழுதவும் இசை பாடவும் உருவந்தீட்டவும் முழு வல்லமை பெற்றபொழுதே கல்வி முற்றுப் பெறும்.[12]
  •  ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே.[12]
  • குழந்தைகளை முதலில் 'மனிதர்' ஆக்குங்கள். பின்னால் 'மதானுஷ்டானிகள்' ஆக்காலம்.[12]
  • குழந்தையை எத்தகைய வழ்விற்குத் தயார் செய்ய வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளாவிட்டால் ஆசிரியன் எவனும் கல்வி அபிவிருத்தி செய்ய முடியாது.[12]
  • பொய்க் கல்வி பெருமை பேசும்; மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும்.[12]
  • மக்கள் அறியாதவைகளைத் தெரிந்துகொள்ளும்படி கற்பிப்பது கல்வியின் பொருளாகாது. அவர்கள் நடையை மாற்றிச் செம்மையாக நடந்துகொள்ளும்படி கற்பிப்பதேயாகும்.[13]

கலை[தொகு]

  • உயர்ந்த கலைகள் அனைத்தும் கடவுளின் வேலையில் மனிதனுக்குரிய மகிழ்ச்சியை வெளிக் காட்டுகின்றன. [14]
  • கலையில் நன்மையானவையெல்லாம் ஓர் ஆன்மா மற்றொன்றுக்கு வெளியிடுவதாகும். அதன் அருமை அதை வெளியிடுபவரின் பெருமையைப் பொறுத்தது. - ரஸ்கின்[14]

கவிதை[தொகு]

  • உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள்.[15]

களவு[தொகு]

  • மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே.[16]
  • தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள். அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும்.[16]

சமயமும் நம்பிக்கையும்[தொகு]

  • முக்கியமான விஷயங்களில் சமயத்தை இரண்டாவதாகக் கருதுவது அதைப் பொருட்படுத்துவதாகாது. எவன் கடவுளுக்கு இரண்டாவது இடத்தை அளிக்கிறானோ அவன் இடமே அளிக்காதவனாவான்.[17]

செல்வம்[தொகு]

  • பணமே வாழ்வின் லட்சியமானால் அது தீய வழியிலேயே தேடவும் செலவிடவும் படும். இருவிதத்திலும் வாழ்வு பாழே.[18]
  • கற்றோரும், அறிஞரும், வீரரும் பணத்தை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுதல் என்பது ஒருநாளும் முடியாத காரியம்.[18]
  • பணத்தைத் தீயவழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிடப் பெரிய குற்றம். தீயவழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம்.[18]
  • ஒருவன் பணத்தைத் தன் தேவைக்கு அதிகமாகத் தேடவும் தனவந்தன் என்ற பெயரோடு சாகவும் விரும்பினால், அது அவனுக்கும் அவன் சந்ததியார்க்கும் சாபமாகவே முடியும்.[18]
  • உள்ளத்தில் லாப ஆசை இருக்கும் வரை கடவுள் ராஜ்யத்தைப் பற்றிய உண்மையான அறிவு உண்டாக முடியாது.[18]
  • எந்த மனிதனும் யோக்கியமான முறையில் வாழ்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடமுடியுமே யன்றி ஏராளமான பணத்தைக் குவித்து விட முடியாது.[18]
  • அதிர்ஷ்டதேவதை அநேகர்க்கு அளவுக்கு அதிகமாக அருள்வதாகக் கூறுவர். ஆனால் அவளோ யார்க்கும் போதுமான அளவுகூட ஒருபொழுதும் அளிப்பதில்லை.[18]
  • பணம் வாழ்வின் லட்சியமாக ஆகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்; தவறான வழியிலே தான் செலவழிக்கப்படும். அது தேடும்பொழுதும் செலவு செய்யும்பொழுதும் தீமையே பயக்கும்.[18]
  • தேவைக்குப் போதுமான பணமிருந்தும் செல்வன் என்ற பெயருடன் சாக விரும்பிப் பணத்தைத் தேடுபவன் பணத்தையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன் ஆவான்.[18]

துறவு[தொகு]

  • இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே. -ரஸ்கின்[19]

நரகம்[தொகு]

  • நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டவரே என்பதையும் அறிவேன்.'[20]

நல்லதும் கெட்டதும் [தொகு]

  • நன்மை தீமையினின்று பிறவாவிடினும் அது தீமையை எதிர்ப்பதிலேயே அடையக்கூடிய அபிவிருத்தி அனைத்தை யும் அடையும்.[21]

நாகரிகம்[தொகு]

  • நாகரிகம் உடையவர் யார்? தமக்கு உடை செய்யவும் வயிறு நிரப்பவும் உடலை அலங்கரிக்கவும் அடிமைகள் உடையார் நாகரிகம் இல்லாதவர். தம் அத்யாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யமட்டும் சேவகர் வைத்துக் கொண்டு அவர்க்கும் சுகவாழ்வு அளிப்பவரே நாகரிகம் உடையவர்.[22]

நூல்கள்[தொகு]

  • வாசிக்கத் தகுந்த நூல் வாங்கவும் தகுந்ததே.[23]

நூற் சுவை[தொகு]

  •  சுவையின் தூய்மைக்கு உறைகல் எது வெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே.[24]
  • நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும்.[24]

பல தொழில்[தொகு]

  • அடிக்கடி மாறுபவர்கள் மிகவும் பலவீனமான மனம் படைத்தவர்களாயும், மிகவும் கடின இதயம் பெற்றவர்களாயும் இருப்பார்கள் என்பதைக் கண்டுகொள்ளலாம்.[25]

பேரறிவாளர்[தொகு]

  • பார்வையிலேயே விசேடத் திறமையுடன் பாாக்கும் உயர்ந்த ஆற்றலே பேரறிவு.[26]

பொய்மை[தொகு]

  • எதற்காகவும் நாம் பொய் பேசாதிருக்க வேண்டும். ஒன்று. தீமையில்லாத பொய் என்றும், மற்றொன்று. மனமாரச் சொன்னதன்று என்றும் எஎண்ண வேண்டாம். அவை அனைத்தையும் வெளியே தள்ளிவிடுங்டுங்கள். அவை சாதாரணமாயும் தற்செயலாயும் ஏற்பட்டிருருக்கலாம். ஆனால், அவை புகை படிந்த ஆபாசங்கள் நம் இதயங்களில் அவை ஒட்டியிராமல் கத்தமாக வெளியேற்றிவிட வேண்டும். அவைகளுள் எது பெரிது. எது மிகவும் மோசமானது என்று கவலையே வேண்டியதில்லை.[27]

மகிழ்ச்சி[தொகு]

  • திடமான, ஆரோக்கியமுள்ள மனிதனுக்குக் கன்னங்களில் நிறம் எப்படிச் சிவந்திருக்குமோ, அது போலவே இதயத்திலும் இயற்கையாக மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எங்கெங்கு வழக்கமாகச் சோகம் படர்ந்துள்ளதோ அங்கெல்லாம் காற்று கெட்டிருக்க வேண்டும். அல்லது அளவுக்கதிகமாகக் கடுமையான வேலையிருக்க வேண்டும் அல்லது தவறான பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்.[28]

மன உறுதியின்மை[தொகு]

  • அடிக்கடி மாறுதலை விரும்பும் மனிதர்கள் மனவலிமையற்றவர்கள். ஆனால், அவர்கள் கடின இதயம் படைத்தவர்கள்.[29]

வறுமை[தொகு]

  • எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன்.[30]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. John Ruskin
  2. 2.0 2.1 2.2 2.3 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  3. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இசை. நூல் 158-159. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. 7.0 7.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 110. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. 9.0 9.1 9.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. 12.00 12.01 12.02 12.03 12.04 12.05 12.06 12.07 12.08 12.09 12.10 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 155-156. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. 14.0 14.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 154-155. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  16. 16.0 16.1 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23. 
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 175-177. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 18.6 18.7 18.8 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  19. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/துறவு. நூல் 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  20. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நரகம். நூல் 37-38. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  21. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  22. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  23. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  24. 24.0 24.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூற் சுவை. நூல் 172-174. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 258-259. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286-287. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  27. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 287-289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  28. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 293-294. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  29. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 299. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  30. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_ரஸ்கின்&oldid=38142" இலிருந்து மீள்விக்கப்பட்டது