தீபாவளி

விக்கிமேற்கோள் இலிருந்து
தீபாவளி விளக்கு

தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • "தீபாவளி" என்ற சொல்லுக்கு ஒர் ஏற்பாடு அல்லது விளக்குகளின் வரிசை என்று பொருள். ஒளி என்பது கடவுள், உண்மை மற்றும் ஞானத்திற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.
  • ஆரியர்கள், திராவிடர்களை ராமர் மற்றும் கிருஷ்ணரின் பிறந்தநாளை தீபாவளி விழாவாகக் கொண்டாடச் செய்தனர். அதேபோல் வடக்கில் இருந்து வந்தவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை நாளகாக் கொண்டாடச் செய்தனர். அவ்வளவு தான். இந்த தினத்தைக் கொண்டாடுவதில் வேறு எந்த நன்மையும் பாராட்டத்தக்க காரணமும் இல்லை
  • ஆரியப் பார்ப்பனர்கள் கட்டவிழ்த்த கற்பனைக் கதையே தீபாவளி.- மறைமலை அடிகள் (நூல்: தமிழர் மதம்)
  • ஆரியரின் வெறியாட்டு வேள்விகளை அழிக்க வந்த சூரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என இகழ்ந்து பேசப்படுவோராயினர். -மறைமலை அடிகள் (நூல்: வேளாளர் நாகரீகம்)
  • தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதன்று. தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று. கா. சு. பிள்ளை (நூல்: தமிழர் சமயம்)
  • தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்தமான மகாவீரர் இறந்த விடியற்காலை தினமே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை. "தீபாம்-விளக்கு, ஆவளி-வரிசை" -மயிலை சீனி. வேங்கடசாமி (நூல்: சமணமும் தமிழும்)
  • தமிழர்க்கும், தமிழ் இலக்கியத்திற்கும் - தீபாவளிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. அ. கி. பரந்தாமன் (நூல்: மதுரை நாயக்கர் கால வரலாறு)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=தீபாவளி&oldid=38089" இலிருந்து மீள்விக்கப்பட்டது