செக் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இதில் செக் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அடங்காப்பிடாரி ஒருத்தி இருந்தால் போதும் - சுற்றிலும் பத்து வீடுகளுக்குக் காவல் நாய் தேவையில்லை.
  • அத்தையிடம் ஒரு விஷயம் சொன்னாற் போதும், அகிலமெல்லாம் பரவிவிடும்.
  • உன் அண்டை வீட்டுக்காரன் நல்லவனா யிருந்தால், உன் வீடு கூடுதலாக நூறு பவுன் பெறும்.
  • ஒரு பெண் சீட்டியடித்தால், ஏழு ஆலயங்கள் அதிரும்.
  • கல்யாணம் ஒரு நாள், இரு நாள்தான், அதன் பலனோ நெடுநாள் இருக்கும்.
  • சூரியன் ஒரு போதும் வராத இடத்திற்கு வைத்தியர் அடிக்கடி வருவார்.
  • பல வைத்தியர்கள் பார்த்தால், மரணம் நிச்சயம்தான்.
  • பன்னிரண்டு வயது வரை உன் மகளுக்குத் தலை வாரிவிடு;. பதினாறு வயதுவரை பாதுகாத்து வை; பின்னர் எவன் மணந்து கொள்ள வந்தாலும், அவளைக் கொடுத்து, நன்றியும் சொல்லு.
  • பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும்.
  • நாய்க்கு மேலாக நாம் குரைக்க முடியாது, காகத்திற்கு மேலாகக் கரைய முடியாது, ஒரு பெண்ணுக்கு மேலாகச் சண்டைபோட முடியாது.
  • நாள்தோறும் ஆப்பிள் உண்பவன் வைத்தியர் பிழைப்பைக் கெடுக்கிறான்.
  • வீட்டிலிருக்கும் விருந்தாளி கடவுளுக்கு நிகரானவர்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செக்_பழமொழிகள்&oldid=37999" இலிருந்து மீள்விக்கப்பட்டது