செக் பழமொழிகள்
Jump to navigation
Jump to search
இதில் செக் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அத்தையிடம் ஒரு விஷயம் சொன்னாற் போதும், அகிலமெல்லாம் பரவிவிடும்.
- உன் அண்டை வீட்டுக்காரன் நல்லவனா யிருந்தால், உன் வீடு கூடுதலாக நூறு பவுன் பெறும்.
- ஒரு பெண் சீட்டியடித்தால், ஏழு ஆலயங்கள் அதிரும்.
- பன்னிரண்டு வயது வரை உன் மகளுக்குத் தலை வாரிவிடு;. பதினாறு வயதுவரை பாதுகாத்து வை; பின்னர் எவன் மணந்து கொள்ள வந்தாலும், அவளைக் கொடுத்து, நன்றியும் சொல்லு.
- பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும்.
- நாய்க்கு மேலாக நாம் குரைக்க முடியாது, காகத்திற்கு மேலாகக் கரைய முடியாது, ஒரு பெண்ணுக்கு மேலாகச் சண்டைபோட முடியாது.