உள்ளடக்கத்துக்குச் செல்

டெமோக்கிரட்டிசு

விக்கிமேற்கோள் இலிருந்து

டெமோக்கிரட்டிசு (Democritus) (கி.மு. ஏறத்தாழ 460 – ஏறத்தாழ 370) என்பவர் கிரேக்க நாட்டின் அப்டெர்ரா, திரேசில் பிறந்த தொன்மை கிரேக்க மெய்யியலாளர் ஆவார். இவர் சாக்கிரடிசுக்கு முந்தைய தாக்கமிக்க மெய்யியலாளராகவும் அண்டத்தில் அணுத்தன்மையை வழிமொழிந்த லெசிப்புசின் சீடராகவும் இருந்தார்.

இவரது மேற்கோள்கள்

[தொகு]
  • மகிழ்ச்சி என்பது புறத்திலே இல்லை; அகத்திலேதான் இருக்கிறது.[1]
  • செல்வத்தைக் காட்டிலும் சான்றான்மையே சிறப்புடைத்து.[1]
  • அறிவைக் காட்டிலும் வேறுசக்தியோ, செல்வமோ கிடையாது.[1]
  • நல்ல காரியங்களை, மனப்பூர்வமாகச் செய்யவேண்டுமே தவிர, யாருடைய கட்டாயத்திற்காகவும் செய்யக் கூடாது; அப்படியே பலனை எதிர்பார்த்தும் செய்யக்கூடாது. நல்லதைச் செய்தால் நல்லது என்பதற்காகவே செய்யவேண்டும்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 வெ. சாமிநாதசர்மா, கிரீஸ் வாழ்ந்த வரலாறு, நூல், பக்கம்: 404-405, பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், புதுக்கோட்டை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=டெமோக்கிரட்டிசு&oldid=37121" இலிருந்து மீள்விக்கப்பட்டது