பிறநாட்டுப் பழமொழிகள்
Appearance
- இனிப்பு என்று சொல்வதனால் நா இனிமை கைகூடாது -- அசர்பைஜான் நாட்டுப் பழமொழி.
- மாடு வயலுக்கு நன்றி சொன்னதில்லை -- ஹெய்தி நாட்டுப் பழமொழி.
- மேகங்களுக்கு மேல் வானம் எப்போதுமே நீலம் தான் -- டென்மார்க் நாட்டுப் பழமொழி.
- கடவுளைச் சிரிக்கவைக்க வேண்டுமெனில் அவரிடம் உன் எதிர்காலத்திட்டங்களைக் கூறு- சீனப்பழமொழி
- ஒவ்வொரு சொத்திற்குப் பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது- அரபுப் பழமொழி
- இருபது வயது வரை பறவை வாழ்க்கை, சுற்றித் திரிகிறோம். நாற்பது வயது வரை கழுதை வாழ்கை, பொதி சுமக்கிறோம். அறுபது வயது வரை நாய் வாழ்க்கை, அல்லல்படுகிறோம். எண்பது வரை நத்தை வாழ்க்கை, கூட்டுக்குள் இருக்கிறோம். இறக்கும் வரை கொக்கு வாழ்க்கை, ஒற்றைக் காலில் சாவுக்காகத் தவம் இருக்கிறோம். (பொன்மொழி மேற்கொள், ஜூனியர் விகடன், 19-பிப்ரவரி -2012)
- பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும். -பிரெஞ்சுப் பழமொழி[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.