பிறநாட்டுப் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து
  • இனிப்பு என்று சொல்வதனால் நா இனிமை கைகூடாது -- அசர்பைஜான் நாட்டுப் பழமொழி.
  • மாடு வயலுக்கு நன்றி சொன்னதில்லை -- ஹெய்தி நாட்டுப் பழமொழி.
  • மேகங்களுக்கு மேல் வானம் எப்போதுமே நீலம் தான் -- டென்மார்க் நாட்டுப் பழமொழி.
  • கடவுளைச் சிரிக்கவைக்க வேண்டுமெனில் அவரிடம் உன் எதிர்காலத்திட்டங்களைக் கூறு- சீனப்பழமொழி
  • ஒவ்வொரு சொத்திற்குப் பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது- அரபுப் பழமொழி
  • இருபது வயது வரை பறவை வாழ்க்கை, சுற்றித் திரிகிறோம். நாற்பது வயது வரை கழுதை வாழ்கை, பொதி சுமக்கிறோம். அறுபது வயது வரை நாய் வாழ்க்கை, அல்லல்​படுகிறோம். எண்பது வரை நத்தை வாழ்க்கை, கூட்டுக்குள் இருக்கிறோம். இறக்கும் வரை கொக்கு வாழ்க்கை, ஒற்றைக் காலில் சாவுக்காகத் தவம் இருக்கிறோம். (பொன்மொழி மேற்கொள், ஜூனியர் விகடன், 19-பிப்ரவரி -2012)
  • பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும். -பிரெஞ்சுப் பழமொழி[1]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிறநாட்டுப்_பழமொழிகள்&oldid=16938" இலிருந்து மீள்விக்கப்பட்டது