உள்ளடக்கத்துக்குச் செல்

அடிக்கடி மாறுதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

அடிக்கடி மாறுதல் என்பது குறித்த மேற்கோள்கள்.

  • உண்மையான குற்றங்கள் என்று கருத முடியாதவைகளில், அடிக்கடி மாறும் இயல்பைப் போல், ஒரு மனிதனை அருவருக்கத்தக்கவனாயும். உலகோர் அற்பனாயும் கருதும்படி செய்வது வேறு எதுவுமில்லை. முக்கியமாகச் சமய மாறுதலோ கட்சி மாறுதலோ இத்தகையது. இந்த இரண்டு விஷயங்களிலும் ஒரு மனிதன் தான் மாறுவது கடமை என்று உணர்ந்த போதிலும், அவன் விட்டுப் பிரியும் பழைய நண்பர்கள் அவனை வெறுப்பார்கள். அவன் போய்ச் சேரும் புதிய நண்பர்களும் அவனை ஆர்வத்துடன் வரவேற்ப தில்லை. - அடிஸன்[1]
  • கடிகாரங்கள் நாம் திருப்பிவைக்கிற நிலையில் முறையாக ஒடிக்கொண்டிருக்கும்; ஆனால், மனிதன் முறையற்ற மனிதன். ஒரு போதும் நிலையாக நிற்பதில்லை. ஒருபோதும் உறுதி கொள்வதில்லை. -ஓட்வே[1]
  • மனிதன் மட்டும் நிலையாக நிற்பானானால், அவன் பூரண ஒழுங்குள்ளவனாவான். அவ்வாறு நிற்காததால், அந்த ஒரு தவறு அவனிடம் பல குறைகளைச் சேர்த்துவிடுகின்றது: அவனைப் பல பாவங்களுக்கு உள்ளாக்குகின்றது. - வில்லியம் ஷேக்ஸ்பியர்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -16. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அடிக்கடி_மாறுதல்&oldid=18944" இலிருந்து மீள்விக்கப்பட்டது