வில்லியம் ஷேக்ஸ்பியர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
சிலர் பிறக்கும் போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர் மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.

வில்லியம் சேக்சுபியர் (William Shakespeare) (26 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  • சிலர் பிறக்கும் போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர் மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.
  • மனிதனால் ஒரு முறைதான் இறக்க முடியும்.[1]
  • நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.

அன்பு[தொகு]

  • மாறுதல் கண்ட உடன் மாறிடும் அன்பு உண்மையிலேயே அன்பாகாது.[2]

அறம்[தொகு]

  • அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை-உன் கடவுளை - உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்.[3]
  • மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம்.[3]
  • மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும்.[3]

உண்மை[தொகு]

  • உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது.[4]

வாழ்க்கை[தொகு]

  • வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும். அவை நன்மை, தீமையே![5]

மோட்சம்[தொகு]

  • சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும்.[6]

நரகம்[தொகு]

  • சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப்பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை.[7]

நாடக மேடை[தொகு]

இந்த உலகமே நாடக மேடை
அதில் எல்லோருமே நடிகர்கள்
ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு
ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு.[8]

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்[தொகு]

    • பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்
    • பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
    • பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

சான்றுகள்[தொகு]

  1. Henry IV, Part 2 (1597–8), Feeble, Act III, scene ii.
  2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  3. 3.0 3.1 3.2 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23. 
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மோட்சம். நூல் 36- 37. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நரகம். நூல் 37-38. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. As You Like It (1599–1600), Jaques, Act II, scene vii.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

வார்ப்புரு:Authority control