உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்தி தாசர்

விக்கிமேற்கோள் இலிருந்து

அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாகச் செயற்பட்டார். அவரது இயற்பெயர் காத்தவராயன் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோகிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி, மத, ஆதிக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது.
  • தமிழக தாழ்த்தப்பட்ட குலத்தினவர் அனைவரும் முன்பு பெளத்த சமயத்தினர் ஆக இருந்தவர்கள், பெளத்த சமயம் சைவ/வைணவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டு சேரிக்கு துறத்தப்பட்டனர்.
  • கல்வி வாய்ப்பில்லாத தேசங்களை வரலாற்றில் கண்டிருப்போம். ஆனால், வாய்ப்பிருந்தும் கற்பதைத் தடுத்தது வர்ண தர்மத்தை ஏற்ற இந்தியத் துணைக் கண்டம்தான்.[1]
  • நமது மீட்சிக்கும் விடுதலைக்கும் வெளியிலிருந்து எவரும் உதவிட முடியாது. நமக்கான வலிமையை, சமகாலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் நாமே திரட்டி அணியாக எழுவதன் மூலம் நாமே சாதித்துக்கொள்ள முடியும்.[1]
  • சமூகம் சாதியால் பிளவுற்றிருக்கும்போது இந்தியாவின் விடுதலை முதலில் அதன் ஏற்றத்தாழ்விலிருந்து கிடைக்க வேண்டும்.[1]
  • இந்த மீட்டுறுவாக்க வரலாறு என்பது வரலாறு அற்றவர்களின் வரலாறாக அமைகிறது. [1]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=அயோத்தி_தாசர்&oldid=38245" இலிருந்து மீள்விக்கப்பட்டது