அறிவியல்
Appearance
மேற்கோள்கள்
[தொகு]- அறிவியலால் எதையும் தீர்க்கமுடியாது என்பவர்கள் மூடர்கள்தான்.
- அறிவியல் இயற்கையை நகலெடுப்பதில்லை. மாறாக மறு உருவாக்கம் செய்கிறது.
- இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள்.
- சமய நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் போது அறிவியல் தற்கொலை செய்துகொள்கிறது.
- அறிவியலாவது, மனிதனிடம் உள்ள மனித நேயத்தை, மனிதாபிமானத்தை, மனிதத் தன்மையை, நாளுக்கு நாள் விரிவுபடுத்தி, அவனுக்கு மென்மேலும் ஆன்ம விடுதலை தருவதாகவும், அவனுடைய அறிவானது இயற்கையோடு ஒன்றி, ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி வியனுலகை ஆட்சி செய்யும் ஆற்றலை வழங்குவதாகவும், இந்த உலகில் பிறந்த மனிதன் தனது உற்றார் உறவோடும், சுற்றத்தோடும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப்போதிக்கும் அறிவாகவும் திகழ வேண்டும்.
- விஞ்ஞான உலகில் பெரிய நோக்கங்களுக்காக, சுயநல ஆசையின்றிச் சிரத்தையுடன் வேலை செய்ததை நான் காண்கிறேன். இந்த முறை. மனிதர்களின் மற்ற முயற்சிகள் அனைத்திலும் பரவும் என்று நான் நம்புகிறேன். -எச். ஜி. வெல்ஸ்[6]
- விஞ்ஞானம் முறைப்படுத்தித் தொகுக்கப்பெற்ற அறிவாகும். - ஹெர்மர்ட் ஸ்டென்லர்[6]
- மனிதர்கள். விஞ்ஞான முன்னேற்றம் மனித சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்குமென்று சில சமயங்களில் பேககின்றனர். இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த மயக்கங்களுள் ஒன்று. அறிவு பெருகியுள்ள இந்தக் காலத்தில் இந்தக் கருத்து தள்ளப்பெற வேண்டும். - பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்[6]
சான்றுகள்
[தொகு]- ↑ Descent of Man
- ↑ Science and Human Values
- ↑ The Enemies of Reason, "Slaves to Superstition" [1.01], 13 August 2007, timecode 00:38:16ff.
- ↑ "The Darwin Memorial" (1885)
- ↑ என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
- ↑ 6.0 6.1 6.2 6.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 313-314. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
வெளி இணைப்புக்கள்
[தொகு]