அரசியல் கட்சி
Jump to navigation
Jump to search
அரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- கட்சிக் கொடிகளின் நிழலில்தான் தேசபக்தி புதைக்கப்படுகின்றது. - ஸெயிண்ட் பியெர்[1]
- தாங்கள் எந்தக் கட்சியிலும் சேராதவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் நிச்சயமாக நம் கட்சியில் சேராதவர்கள். - ஜே. பி. பென்[1]
- ஒரு விஷயத்திற்கு நான் தகுதியேயில்லை. அதாவது ஒரு கட்சியின் கட்டளைப்படி. சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு. கொள்கைகளை அனுசரிப்பதும் கைவிடுவதும் ஆகும். - ஹொரேஸ்மான்[1]
- சுதந்தரமான நாடுகளில் அரசாங்கம் ஆட்சி செய்வதைத் கண்காணிப்பதற்காகக் கட்சிகள் இருப்பது நலம் என்று ஓர் அபிப்பிராயம் இருந்து வருகின்றது. அது சுதந்தர உணர்ச்சியைக் காத்து வரும் என்றும் கருதப்படுகின்றது. ஓர் அளவுக்கு இது உண்மையாயிருக்கலாம். ஆனால், பொது மக்களுக்குப் பொறுப்புள்ள தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள அரசாங்கங்களில் இத்தகைய உணர்ச்சியை வளர்க்கக்கூடாது. - வாஷிங்டன்[1]
- ஒரு கட்சியிலுள்ள மனிதர்கள். சுலோகங்கள் கூறுவதற்கு மட்டும் உரிமையுடையவர்கள் உண்மையில் அவர்களைவிட அடிமைகள் வேறில்லை. -ஸவில்லி[1]