உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவாற்றல்

விக்கிமேற்கோள் இலிருந்து

அறிவாற்றல் (cognition) என்பது "சிந்தனை, அனுபவம் மற்றும் புலன்களின் மூலம் அறிவையும் புரிதலையும் பெறுவதற்கான மன நடவடிக்கை அல்லது செயல்முறையை" குறிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  • அறிவாற்றல் என்பது மூளையின் ஆற்றல். - ஷில்லர்[1]
  • நாம் மரிக்கும்வரை நமது அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்டவர் வரையறை எதுவும் விதிக்கவில்லை -பேக்கன்[1]
  • அறிவாற்றலுக்கு ஒரே குறை உண்டு. அது மிகப்பெரிய குறையாகும். அதுவே மனச்சான்று இல்லாமை, நெப்போலியனை இதற்கு ஏற்ற உதாரணமாகக் கொள்ளலாம். அவனுடைய மூளையின் ஆற்றலில் ஒரு சிறிதளவாவது அவன் இதயத்திற்கு இருந்திருந்தால் அவன் எக்காலத்திய சரித்திரத்திலும் தலைசிறந்த பெரியோர்களுள் ஒருவனாகத் திகழ்ந்திருப்பான். - ஜே. ஆர். லோவெல்[1]
  • அறிவாற்றலுள்ள மனிதன், அத்துடன் நற்குணத்தையும் பெற்றிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனால் பயனில்லை. - சாம்ஃபோர்ட்[1]
  • ஞானிகளின் அறிவாற்றல் கண்ணாடி போன்றது. அது தெய்விக ஒளியை உள்ளே வாங்கிக்கொண்டு அதைப் பிரதிபலிக்கவும் செய்கின்றது. - ஹேர்[1]
  • இதயத்தில் சமயப்பற்றில்லாமல் அறிவாற்றலை மட்டும் வளர்த்துக்கொள்ளல் நாகரிகமான அநாகரிகம், அது மறைமுகமான மிருகப்பான்மை. -பன்ஸென்[1]
  • அறிவாற்றல் மிகுந்தவர்களின் கருவிகளே பெரும் செயல் வீரர்கள். ஆனால், அவ்வீரர்கள் இதை அறிந்திருக்க மாட்டார்கள். - ஹீய்ன்[1]
  • உலகம் உள்ளவரையும், கதிரவன் முதலில் மலைகளின் உச்சியில்தான் பிரகாசிப்பான். பிறகுதான் சமவெளிகளில் ஒளி வீகவான். -புல்வெர்[1]
  • அறிவாற்றல். தொலைவிலுள்ள நாடுகளை விரும்புகின்றது சில்லறை வியாபாரி தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமே வாணிபம் செய்கிறான். ஆனால், பெரிய வணிகன் உலகத்தின் நாலு திசைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தொழில் நடத்துகின்றான். - புல்வெர் [1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 67-68. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அறிவாற்றல்&oldid=21627" இலிருந்து மீள்விக்கப்பட்டது