பிரான்சிஸ் பேக்கன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரான்சிஸ் பேக்கன்

பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon, 22 ஜனவரி 1561 – 9 ஏப்ரல் 1626) ஆங்கில மெய்யிலாளர். பல ஆண்டுகள் முன்னணி அரசியல் தலைவராக விளங்கிய அறிவியலாளர், வழக்கறிஞர், சட்ட நிபுணர், ஆசிரியர் மற்றும் அறிவியல் முறை முன்னோடி ஆவார். அறிவியலும் தொழில் நுட்பமும் இந்த உலகை அடியோடு மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவ ஞானி. அறிவியல் ஆராய்ச்சிகளை தீவிரமாக ஆதரித்த முதல் தத்துவஞானியும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

அன்பு[தொகு]

  • அன்பு ஆன்மாவின் பெருந்தன்மை. அந்த பெருந்தன்மையை நாம் என்னென்ன வேளைகளில் எத்தனை முறை எதிரொலிக்கின்றோம் என்ற அளவைப் பொறுத்து உணர்ச்சியின் பெருக்கம் தான் அன்பு.[1]

அறம்[தொகு]

  • அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையைவிட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது.[2]

பழிவாங்குதல்[தொகு]

  • பழிவாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை.[3]

வீடுபேறு[தொகு]

  • மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம்.[4]

மதம்[தொகு]

  • புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர். அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6 - 12. 
  2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மோட்சம். நூல் 36- 37. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரான்சிஸ்_பேக்கன்&oldid=15910" இருந்து மீள்விக்கப்பட்டது