உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கூர்மை

விக்கிமேற்கோள் இலிருந்து

அறிவுக் கூர்மை என்பது எது உண்மை அல்லது பொய், மேலும் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய முடிவுகளை எடுக்கும் மனதின் திறனைக் குறிக்கிறது.

  • ஒரு மனிதன் தன் பணப்பையில் இருப்பதையெல்லாம் முளைக்குள் ஏற்றிக்கொண்டுவிட்டால், அந்த நிதியை அவனிடமிருந்து எவரும் கவர முடியாது. -ஃபிராங்க்லின்[1]
  • அறிவுக் கூர்மை ஒரு தீவட்டி அல்லது கொள்ளிக் கட்டை போன்றது. அதன் தன்மை அதை உபயோகிப்பவன் செயலில் இருக்கின்றது. -காபல்ரொடே[1]
  • உயர்ந்த மனிதன் ஒழுக்கம்.அறிவு உடல்நிலை ஆகிய மூன்றும் இயற்கைகளிலும் ஒரே மாதிரியான அளவில் வளர்ச்சி பெறுவான். - ஜெர்ரால்டு[1]
  • ஒளி பரவியுள்ளது. துப்பாக்கிகளில் மாட்டியுள்ள சனியன்கள் கூடச் சிந்தனை செய்கின்றன. -கோஸத்[1]
  • எத்தகைய அறிவுத் திறன்களையும் நாம் பழிக்கக்கூடாது. அவை தனித்தனிப் பயன்களையும் கடமைகளையும் பெற்றிருக்கின்றன; மனிதனின் இன்பத்தையே அவை அனைத்தும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அவை நம்மை முன்னேறச் செய்கின்றன. உயர்த்துகின்றன. வாழ்க்கைக்கு இன்பமளிக்கின்றன. -ஸிட்னி ஸ்மித்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 68-69. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அறிவுக்_கூர்மை&oldid=19608" இலிருந்து மீள்விக்கப்பட்டது