உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசையின் தூண்டுதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆசையின் தூண்டுதல் குறித்த மேற்கோள்கள்

 • சயித்தான் நம்மைத் தூண்டுவதில்லை. நாம்தாம் அவனைத் தூண்டுகிறோம் அவனுடைய திறமைக்கு வாய்ப்பளிக்கிறோம். - ஜியார்ஜ் எலியட்[1]
 • ஓர் ஆசைத் தூண்டுதலை எதிர்த்து அடக்குதல், பல பிரார்த்தனைகள் செய்வதைவிட ஆண்டவனுக்குச் சிறந்த வழிபாடாகும். - பென்[1]
 • நம் முன்னேயே தீமை இல்லாதிருந்தால், வெளியேயிருந்து எவ்வித ஆசைத் தூண்டுதலும் ஏற்பட முடியாது.[1]
 • ஆசையின் தூண்டுதல் நமது தன்னம்பிக்கையின் மீது படர்ந்துள்ள துருவைத் தேய்த்து அராவும் அரமாகும். - ஃபெனிலான்[1]
 • ஆசைத் துண்டுதலை எதிர்த்து நிற்கும் ஒவ்வொரு கணமும் ஒரு வெற்றியாகும். - ஃபேபர்[1]
 • வேடன் விரித்துள்ள வலையில் சிக்கிக்கொண்டு உழலாமல் ஆசைத் தூண்டுதலை விலக்குதலே மேல். - டிரைடன் [1]
 • சயித்தானுடன் வியாபாரம் செய்ய விரும்பாதவன் அவனுடைய கடைக்குப் போகாமலே இருந்துவிட வேண்டும்.[1]
 • ஊரூராய்ச் சுற்றும் காலாடிகள் பாழடைந்த மாளிகையில் போய்த் தங்குவதுபோல், காலியாயுள்ள மனத்திலும் பல காலாடி எண்ணங்கள் குடி புகுந்துவிடும். -ஹில்லியர்டு[1]
 • ஆசைத் துண்டுதலே ஏற்படாத மனிதன் எவனுமில்லை. அது ஏற்படாத இடமோ, கூட்டமோ காலமோ கிடையாது. -இ. எச். சேபிள்[1]
 • ஆசைத் தூண்டுதலே இல்லாமற்போனால், நற்குணமும் இல்லாமற்போகும். -கதே[1]

குறிப்புகள்

[தொகு]
 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 85-86. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆசையின்_தூண்டுதல்&oldid=19800" இலிருந்து மீள்விக்கப்பட்டது