ஆப்பிரிக்கப் பழமொழிகள்
Jump to navigation
Jump to search
இப்பக்கத்தில் ஆப்பிரிக்கப் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
- அத்தை மகளை விட்டுவிட்டு, வெளியில் பெண்ணெடுப்பவன் மூடன்.
- அன்புக்கு உற்பத்திஸ்தானம் அன்னை.
- அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது.--அவள் ஈடற்றவள்.
- உணவு இல்லாத இடத்தில் நீரே அமிழ்தம்
- உலகிலே ஒரு குழந்தையை விட்டுச் செல்பவன் நித்தியமாக வாழ்கிறான்.
- உன் மனைவியிடம் ஆலோசனை கேள், ஆனால் அவள் சொல்வதற்கு மாறாகச் செய்.
- ஒவ்வொரு விலங்கும் தன் குகையில் உறுமும்.
- காதல் கட்டுப்பாடற்ற கழுதை.
- குட்டையான பெண்ணை மணந்து கொண்டால், துணி அதிகம் தேவையிராது.
- குழந்தை, ஒட்டகக்கழுத்து மாதிரி, எங்கு வேண்டு மானாலும் நுழையும்.
- குழந்தைகளில்லாத எலி ஆற்றோரம் வீடு கட்டிக்கொள்ளும்.
- குழந்தைகள் தெய்வத்தோடு பேசுகின்றன.
- கேள்விகள் கேட்கும் குழந்தை மூடக் குழந்தையன்று.
- தவழப் பழகிய குழந்தையே நடக்கப் பழகும்.
- தன் வீட்டுக்குத் திரும்பிவரும் மனிதன் தீய சகுனங்களைப் பொருட்படுத்த மாட்டான்.
- தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம்.
- திருமணத்திற்கு முன்னால் கண்களைத் திறந்து வைத்துக்கொள், பின்னால் பாதிக் கண்ணை மூடிக்கொள்.
- தொங்கும் கயிற்றைப் பிடித்திருந்தால் வாழ்வு, விட்டால் சாவு
- நாயைப் போன்றவள் பெண்; எலும்பைக் காட்டினால் நாய் ஏமாந்து பின்னால் வரும்.
- பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சை விட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவது போல, என்னை வைத்துக் கொள்ளவும்.
- பெரிய நகருக்குச் சென்றிராத குழந்தை தன் தாய்தான் தலை சிறந்த சமையற்காரி என்று சொல்லும்.
- பெண்டாட்டி யென்றால், புடவை, துணிமணிகள் என்று பொருள்.
- பெண்ணுக்குப் பணிவது நரகத்திற்குப் பாதை.
- பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு, பாயில் படுத்துறங்கு.
- மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும்.
- மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால், கணவனுக்கு அமைதி கிடைக்கும்.
- மூட்டை கோழிக்கு அடைகாக்கச் சொல்லிக் கொடுக்கிறது!
- முதலாவது செல்வம் குழந்தைகள், இரண்டாவதுதான் பணம்.
- முதற் குழந்தை தந்தைக்குத் தோழன்.
- மெலிந்தவனை அரை ஆள் என்றும், பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை.
- வீட்டுத் தலைவன்மீது தான் வீட்டிலுள்ள எல்லோருடைய குப்பைகளும் கொட்டப்படும்.
- வீட்டைப் பெருக்குவோன் துடைப்பத்தின் மீது அமரக் கூடாது.
- வீடு அன்பு நிறைந்த இடம்.