உணவு

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

உணவு (Food) என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும் [1]

  • உணவு முறைகள் பெரிதும்கவனிக்கற்பாலன. முதலாவது, வேளை நாழியின்றிச் சாப்பிடுவதை நிறுத்தல் நல்லது. பசித் தோற்றம் இல்லாதபோது எக்காரணம்பற்றியும் உணவு கொள்ளளாகாது. -திரு. வி. கலியாணசுந்தரனார்[2]
  • மீதூண் கொள்வது அறியாமை. நோய்க்கும் அகால மரணத்துக்கும் அடிகோல்வது மீதூணாகும். முன்னே உண்டது செரிப்பதற்குள், மேலே உண்டு சுமை சுமத்திக் கொண்டிருத்தல், ஈரலுக்குச் சவலை ஏற்படுத்தும்; பின்னே மற்றப் பேருறுப்புகட்குக் கேடு நிகழும். அதனால், பிணியும் அகால மரணமும் நேரும். -திரு. வி. கலியாணசுந்தரனார்[2]
  • சாப்பாடு உயிர் வாழ்வதற்கு அவசியந்தான். ஆனால் வாழ்க்கை வேறு; உயிர் வாழ்தல் வேறு. வாழ்க்கை ஓர் அநுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டு கடையாக மதித்து விடுகிறார்கள். -புதுமைப்பித்தன்[3]

சான்றுகள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. food. Encyclopædia Britannica. Retrieved on 29 May 2015.
  2. 2.0 2.1 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
  3. முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 28-63. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உணவு&oldid=19879" இருந்து மீள்விக்கப்பட்டது