இரட்டுற மொழிதல்
Appearance
இரட்டுற மொழிதல் அல்லது சிலேடை என்பது குறித்த மேற்கோள்கள்.
- சயித்தான் உண்மையைப் போலக் காட்டி இருபொருளில் பொய் பேசுவதை நான் நம்புவதில்லை. - ஷேக்ஸ்பியர்[1]
- திடீரெனச் சொல்லும் பொய் உண்மையை வதைக்கும்: ஆனால், கவனமாகச் சிந்தனை செய்து இருபொருளில் பேசுவது உண்மையை வேண்டுமென்று. முன்யோசனை செய்து கொலை செய்வதாகும். - மார்லி[1]
- நீ பேசும்படி நேர்ந்தால், உண்மையே பேசு, ஏனெனில். இரட்டுற மொழிதல் பொய் கூறுவதற்குரிய பாதி வழியாகும். பொய்யோ நரகப் பாதை.[1]
- நேரடியாகக் கூறும் பொய்யைப் போல மறைமுகமாகக் கூறும் பொய்யும் தீமையே விளைக்கும். அது அதிக இழிவானதாயும். கோழைத்தனமுள்ளதாயும் இருக்கும்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 104-105. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.