இராசகோபாலாச்சாரி

விக்கிமேற்கோள் இல் இருந்து
(இராஜாஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
C Rajagopalachari Feb 17 2011.JPG

இராசகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
    • வழக்கறிஞர் தொழிலில் இருந்து விழகிய பொழுது கூறியது.[1]
  • அரசு லாட்டரி விற்பனையை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஏழை மக்களிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது. ஒரு மாநில அரசு வருவாயைக் கருதி லாட்டரியை நடத்துமானால், சூதாட்ட நிலையங்களை நடத்துவோரைத் தண்டிக்கும் தார்மீக உரிமை அதற்கு எப்படி இருக்க முடியும்?
    • அண்ணாவின் அரசு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டபோது கூறியது.

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

பொன் மொழிகள்[தொகு]

  • நம்முடைய தேகமும், உள்ளமும் ஆண்டவனுடைய கோயில். அதைச் சுத்தமாக வைத்துக் காப்பது நம் கடமை.
  • எவ்வளவு கல்வியும் செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை.
  • தீண்டாமை என்பது நமது சமூகத்தில் ஒரு மாசு. தீண்டாமை ஒரு விஷப் பாம்பு. அதைக் கொன்றாக வேண்டும்.
  • பள்ளிக்கூடங்கள் தேசத்தில் எத்தனை இருந்தாலும், பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடேயாகும்.
  • வாழ்கையில் தைரியமாக இருப்பதைவிட மகிழ்ச்சி அளிக்க்கூடிய விஷயம் வேறு என்ன இருக்க முடியும்!
  • ஞானமும், பக்தியும் அனைவருக்கும் உரித்தான பெருஞ்செல்வம்.
  • கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது. சாந்தமே முகத்திற்கு அழகு தருகிறது.
  • ஒழுக்கத்துடனும், நாணயத்துடனும் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால், எல்லோருக்கும் நன்மை விளையும்.
  • நம்முடைய சமூகம் சுதந்திர வாழ்க்கையை அடைந்துவிட்டது. சுதந்திரத்துடன் சுகமும் பெறவேண்டுமானால், மக்கள் அற வழியில் நிற்கவேண்டும்.

மேற்கோள்[தொகு]

கிருட்டிணகிரி மாவட்டம், தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பார்வையாளர்களுக்கு வழங்கும் இராசாசி வாழ்கை குறிப்பு ஏட்டில் உள்ள அவரது பொன் மொழிகள். வெளியீடு இயக்குநர், செய்தி- மக்கள் தொடர்பு துறை, சுற்றுலாதுறை தமிழ்நாடு அரசு.(நவம்பர் 1986 இல் அச்சிடப்பட்டது)

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. தமிழருவி மணியன் (25 டிசம்பர் 2013). ராஜாஜி என்ற ராஜரிஷி. தி இந்து. Retrieved on 6 சூலை 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இராசகோபாலாச்சாரி&oldid=14041" இருந்து மீள்விக்கப்பட்டது