உள்ளடக்கத்துக்குச் செல்

இளமை

விக்கிமேற்கோள் இலிருந்து

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • குறித்த ஒரு காலத்தில், ஒரு தேசத்தின் கதி அதன் மக்களில் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் அபிப்பிராயங்களைப் பொறுத்துள்ள்து. - கதே[1]
  • இளமையான என் வசந்த காலத்தை நான் சோம்பலான விளையாட்டில் வீணாக்க மாட்டேன்; அப்பொழுது நான் பயனுள்ள விதைகளை விதைப்பேன். வயது வந்த பின்பு அவை நன்றாக மலர்ந்து, நான் வயோதிகனாகும்பொழுது அவை கனிகளை அளிக்கும். - ஹில்ஹவுஸ்[1]
  • வாலிபம் மகிழ்ச்சி நிறைந்த வசந்த காலம். அப்பொழுது கொந்தளித்துப் பெருகும் உதிரத்தில் இன்பம் நிறைந்திருக்கும். இயற்கை தன் விருந்தில் பங்கு கொள்ளும்படி ஆயிரம் பாடல்களைப் பாடி நம்மை அழைக்கும். - ரிட்ஜ்வே[1]
  • வழக்கங்கள். நம்பிக்கைகள். உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமை, - ரஸ்கின்[1]
  • ஏதாவது செய்யவும். நல்ல முறையில் உருவாகவும் ஏற்ற பருவம் இளமை, டி. டி. முங்கர்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 110. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இளமை&oldid=20150" இலிருந்து மீள்விக்கப்பட்டது