உடற் பயிற்சி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

உடற்பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி இயன்முறைமருத்துவம்த்தில் பெரும்பங்கு வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே.

மேற்கோள்கள்[தொகு]

  • உடற்பயிற்சிக்குரிய நேரம் காலையும் மாலையுமாகும். இருவேளை செய்ய இயலாதோர் காலையில் மட்டும் செய்வது நலம். காலையில் இயலாதோர் மாலையில் ஆற்றலாம். காலை நேரம் மிக உரியது. -திரு. வி. கலியாணசுந்தரனார்[1]
  • வியர்வை சொட்டச்சொட்டப் பயிற்சி செய்து, பின்னைச் சிறிது நேரம் தாழ்ந்து நீராடுதல் வேண்டும். திரு. வி. கலியாணசுந்தரனார்[1]
  • அறிவாளிகள் உடல் நலத்திற்காக உடற்பயிற்சியையே நாடுவார்கள். விளையாட்டு மைதானங்களில் ஆரோக்கியம் விலையில்லாமல் கிடைக்கும். வைத்தியரிடம் பணம் கொடுத்துக் குமட்டலான மருந்தை வாங்கிக் குடிப்பதைவிட இது மேலானது - டிரைடன்[2]
  • உழைப்பதே உழைப்பின் பயன் என்று சொல்லத்தக்க முறையில் அமைந்துள்ளது மனிதனின் உடல். - ஜான்ஸன்[2]
  • உடற்பயிற்சி என்பது களைப்புண்டாகாதபடி உழைத்தல் என்று நான் கருதுகிறேன். - ஜான்ஸன்[2]
  • அதிக உழைப்பால் நலிவடைந்த உடல்களைவிட உழைப்பில்லாமல், அயர்ந்து, சோம்பிக் கிடப்பதால் அதிக உடல்கள் பாழாகியுள்ளன. - டாக்டர் ரஷ்[2]
  • உடற்பயிற்சியால் நெஞ்சு விரிகின்றது. உறுப்புகள் பயிற்சி பெறுகின்றன. குத்துச்சண்டை செய்வதன் பயன் கிடைக்கின்றது. ஆனால், அதில் கிடைக்கும் குத்துகளும் இல்லை. - அடிஸன்[2]

சான்றுகள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உடற்_பயிற்சி&oldid=20347" இருந்து மீள்விக்கப்பட்டது