உணர்ச்சி

விக்கிமேற்கோள் இல் இருந்து
(உணர்ச்சிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

உணர்ச்சி (Emotions) என்பது மனநல செயல்பாட்டு அனுபவம் ஆகும். இது தீவிர உயர் மட்ட இன்பம் அல்லது அதிருப்தி ஆகியவற்றால் தனித்தன்மையளித்து வகைப்படுத்தப்படும் செயல் ஆகும்

மேற்கோள்கள்[தொகு]

 • இதயம் மூளைக்கு மூத்தது. முதலில் தோன்றியதற்கு உணர்ச்சிகள் அதிகம்; ஆனால், அதற்குக் கண் தெரியாது. அதன் தம்பியாகிய மூளைக்குப் பார்வை அதிகம் உணர்ச்சி கிடையாது. குருடன் கண்ணுள்ளவனால் வழிகாட்டப்பெற வேண்டும். இல்லாவிடின் தடுக்கி விழுவான். -ஸீக்லொ[1]
 • மலர்களுக்காக விரைவில் ஆவல் கொள்ளும் இதயந்தான் முள்ளைக் கண்டு முதலில் வருந்தும். - மூர்[1]
 • உணர்ச்சி மிகுதியால் துயரம் ஏற்படுகின்றது. உணர்ச்சிக் குறைவால் குற்றத்திற்கு வழி பிறக்கும். - டாலிரான்ட்[1]
 • சிரிப்பும் கண்ணீரும் உணர்ச்சி என்னும் ஒரே இயந்திரத்தை ஓட்டுகின்றன. ஒன்று. காற்றின் வலிமையாலும், மற்றது தண்ணீரின் வலிமையாலும் ஓட்டுகின்றன. அவ்வளவுதான். - ஹோம்ஸ்[1]
 • உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் அவர்களுக்கு எல்லாம் தலைகீழாகவே தெரியும். - பிளேட்டோ[1]
 • மனிதர்கள் உணர்ச்சிகளைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்வதைவிட்டு, தங்களை உணர்ச்சிகள் பயன்படுத்திக் கொள்ளும்படி வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். - ஸ்டீல்[1]
 • உணர்ச்சிகள் நம்மை உணரச்செய்கின்றன. ஆனால், தெளிவாகப் பார்க்கும்படி செய்வதில்லை. - மான்டெஸ்கியு[1]
 • அடிமைகளுள் மட்டமானவன் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவன். - புருக்[1]
 • சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன. முடிவு செய்கின்றன. நாம் அருகில் நின்று வியந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. - ஜார்ஜ் எலியட்[1]
 • உணர்ச்சிகள் அடங்காத கால்நடைகள். ஆதலால், அவைகளைக் கட்டியே வைக்க வேண்டும். நமது சமயம், அறிவு. முன் கவனம் ஆகியவைகளால் நாம் அவைகளை ஆண்டு அடக்கி வரவுேண்டும்.[1]
 • உணர்ச்சி என்பது உள்ளத்தின் குடிவெறி, - ஸௌத்[1]
 • உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒவ்வொரு மனித இதயமும் ஒரு தனி உலகம் அதன் அனுபவம் மற்றவர்களுக்குப் பயன்படாது. - புல்வெர்[1]
 • அநேகமாக எல்லா மனிதர்களும் ஒவ்வோர் உணர்ச்சியையும் ஓரளவு பிறப்பிலேயே பெற்றுள்ளனர். ஆனால், ஒவ்வொருவருடைய உணர்ச்சிகளிலும் ஓர் உணர்ச்சி மட்டும் முனைப்பாக நிற்கும். இதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த முதன்மையான உணர்ச்சி சம்பந்தப்பட்ட மட்டில், ஒருவனை நாம் நம்பியிருக்கக்கூடாது.- செஸ்டர்ஃபீய்ட்[1]

குறிப்புகள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118-120. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உணர்ச்சி&oldid=20368" இருந்து மீள்விக்கப்பட்டது