பிளேட்டோ

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
 • கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்!
 • நேர்மை பெரும்பாலான நேரங்களில் நேர்மையின்மையை விட குறைவான லாபம் உள்ளதாகவே இருக்கின்றது.
 • துவக்கமே ஒரு வேலையின் மிக முக்கியமான பகுதியாக இருக்கின்றது.
 • நாம் உறுதியான நம்பிக்கையுடன் போராடினால், நம்மிடம் இருமடங்கு ஆயுதம் இருப்பதைப் போன்றது.
 • ஆசை, உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களிலிருந்தே மனிதனின் நடத்தை வழிந்தோடுகிறது.
 • இன்றைய கற்பவர் நாளைய தலைவர்.
 • பரிசோதனை இல்லாத வாழ்க்கை, மதிப்புடைய வாழ்க்கை அல்ல.
 • தேவையே கண்டுபிடிப்பின் தாய்.
 • ஒரு மனிதன் தன்னை வெற்றிகொள்வதே அனைத்து வெற்றிகளுக்கும் முதலாவதும், உன்னதமானதும் ஆகும
 • நல்ல விஷயத்தைத் திரும்பச் செய்வதில் எந்த தீங்கும் இருக்கப் போவதில்லை.
 • எந்த வழியில் ஒரு மனிதனுக்கு கல்வி தொடங்குகின்றது என்பதே வாழ்க்கையில் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
 • எதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்பதை அறிந்திருக்கும் செயலே தைரியம்.
 • நல்ல வேலைக்காரனாக இல்லாத ஒருவன், நல்ல எஜமானனாக இருக்க மாட்டான்.

அறம்[தொகு]

 • அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது; அதற்கு முன்னால் அன்று.[1]

குறிப்புகள்[தொகு]

 1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிளேட்டோ&oldid=15407" இருந்து மீள்விக்கப்பட்டது