உள்ளடக்கத்துக்குச் செல்

உதயநிதி ஸ்டாலின்

விக்கிமேற்கோள் இலிருந்து

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்.[1][2]
  • மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம், நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம், மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம்.[3]
  • இந்தியா அதன் விளையாட்டுத்தன்மைக்கும், விருந்தோம்பலுக்கும் பெயர்பெற்ற நாடு. இருப்பினும் நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று பாக்கிதான் வீரருக்கு நேர்ந்தது ஏற்புடையது அல்ல. அது மிகவும் கீழ்த்தரமானது. விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்க வேண்டும். சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும். அதை வெறுப்பைப் பரப்பப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது.[4]
  • கடந்தாண்டு இதே மேடையில் நான் கிறித்தவன் என்று பேசியது பேசு பொருளானது. மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு கிறித்தவன். கிறித்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். அது மட்டுமல்லாமல், நீங்கள் என்னைக் கிறித்துவன் என்று அழைத்தால் கிறித்துவன், இந்து என்று அழைத்தால் இந்து, முசுலிம் என்று அழைத்தால் முசுலிம். எனக்கென்று எந்தவொரு சாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.[5]
  • இராமர் கோவில் திறப்பிற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை. [6]
  • நாம் ஒரு ரூபாயை மத்தியரசுக்கு வரியாகக் கொடுத்தால் மாநில அரசுக்கு 29 பைசாவைத் தான் கொடுக்கிறார். உத்திர பிரதேச மாநிலத்திற்கு 1 ரூபாய் வரி கட்டினால் 3 ரூபாய், பீகார் மாநிலத்திற்கு 7 ரூபாயும் திருப்பிக் கொடுக்கிறார். ஆனால் நமக்கு 29 பைசாதான் திருப்பித் தருகிறார். எனவே மோடி வாக்கு சேகரிக்க தமிழகம் வந்தால் '29 பைசா' என்றுதான் நீங்கள் அழைக்க வேண்டும்.[7]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளைப் பொறுத்தவரையில், அவர் ஒரு இளையவர். அவர் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள். – மம்தா பானர்ஜி[8]
  • அவர்கள் பாசை (மொழிநடை) எப்போதும் அப்படித்தான் இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்குயுரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம். அப்பன் வீடு.. ஆத்தா வா.. போன்ற பேச்சுகள், அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. அவரின் தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழறிஞர். வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுவாகவே சொல்கிறேன்; அவர்மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை – நிர்மலா சீதாராமன்[9]
  • உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது, அது அவரின் தனிப்பட்ட சிந்தனை. சனாதன தர்மம் குறித்த கருத்துக்காக நிச்சயம் அவர் தண்டிக்கப்பட வேண்டும். இக்கருத்தை 'இந்தியா' கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. – அனுமுலா ரேவந்த் ரெட்டி[10]

சான்றுகள்

[தொகு]
  1. முரளிதரன் காசி விஸ்வநாதன் (13 செப்டெம்பர் 2023). சனாதனம் சர்ச்சை: தமிழ்நாட்டின் அரசியல் ஆளுமையாக உருவெடுக்கிறாரா உதயநிதி?. பிபிசி தமிழ்.
  2. சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், வைரலான வீடியோ. நியூசு தமிழ் 24X7.
  3. மிக்ஜாம் புயல் நிவாரண நிதி: நிர்மலா சீதாராமன் விமர்சனமும் உதயநிதியின் பதிலும்.. தொடரும் பதிலடிகள்!. புதிய தலைமுறை (22 திசம்பர் 2023).
  4. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு எதிரான முழக்கங்கள் கீழ்த்தரமானவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல் இந்து தமிழ் திசை
  5. ``மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவன்... அதில் பெருமை கொள்கிறேன்!" - அமைச்சர் உதயநிதி. விகடன் (24 திசம்பர் 2023).
  6. “மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுக-க்கு உடன்பாடு இல்லை” - அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி புதிய தலைமுறை
  7. `தமிழ்நாடு என்றால் மோடிக்கு பிடிக்காது; அவர் வந்தால் ’29 பைசா’ என்றுதான் அழைக்க வேண்டும்” - உதயநிதி. விகடன்.
  8. "ஜூனியர் என்பதால் உதயநிதிக்கு இது தெரியவில்லை" - சனாதன சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து. இந்து தமிழ் திசை (05 செப்டம்பர் 2023).
  9. அவங்க பாஷை அப்படி தான் இருக்கும்... உதயநிதி நாக்கை அடக்கணும் - கொந்தளித்த நிர்மலா சீதாராமன். நியூசு 18 தமிழ் (22 திசம்பர் 2023).
  10. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து. இந்து தமிழ் திசை (21 ஏப்ரல் 2024).
"https://ta.wikiquote.org/w/index.php?title=உதயநிதி_ஸ்டாலின்&oldid=38298" இலிருந்து மீள்விக்கப்பட்டது