உபதேசம்

விக்கிமேற்கோள் இலிருந்து

உபதேசம் (Preaching) என்பது பெரும்பாலும் மதகுருவின் சொற்பொழிவைக் குறிக்கிறது. இது வழக்கமாக கடந்த கால மற்றும் தற்போதைய சூழல்களில் உள்ள நம்பிக்கை, நடத்தை ஆகியவற்றை விளக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • உன் உபதேசத்தைக் கேட்டவர்கள் ஆன்மிக வளர்ச்சியில் ஆசை கொண்டு விளங்கும்படி செய்ய வேண்டும் இல்லாவிடில் உன் உபதேசம் வீணானது. - கோல்பர்ன்[1]
  • உபதேசியாரின் அறிவுத்திறனைக்காட்டிலும் அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையே கேட்பவர்களின் இதயங்களில் பதிகின்றது. உயிர்தான் உயிரை அளிக்க வல்லது. -ராபர்ட்ஸன்[1]
  • உபதேசம் செய்பவர் படிப்பில்லாதவர்களுக்கு எளிய முறையிலும், தெளிவாகவும். பூரணமாகவும் கற்பிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், ஊக்கப் படுத்துவதைவிட அடிப்படையான விஷயங்களைக் கற்பிப்பது அவசியம. - லூதர்[1]
  • உபதேசம் செய்வதற்கு உயிர்த்துடிப்புள்ள ஒரு மனிதன் போதும், பேரறிவு தேவையில்லை. -ஏ. ஃபெல்ஸ்[1]
  • உலகின் தேவை நல்ல முறையில் உபதேசம் செய்வதன்று: ஆனால், நல்ல முறையில் கேட்பதுதான். - போர்ட்மன்[1]
  • உபதேசம் செய்வது எளிது. ஆனால், நன்றாக உபதேசிப்பது மிகவும் கஷ்டம். - எம்ன்மஸ்[2]
  • ஆன்மாவிலிருந்து வெளிவரும் உபதேசமே ஆன்மாவைக் கவர்ச்சி செய்யும். - ஃபுல்லர்[2]
  • அவர் செருக்குள்ளவர்களை அடங்கச் செய்தார். பாவங்களுக்காக வருந்துபவர்களை உற்சாகப்படுத்தினார்: குற்றம் செய்யும் செல்வர்களை அஞ்சாது கண்டித்தார். அவர் நிறைய உபதேசம் செய்தார். ஆனால். உபதேசத்தைவிட அவர் வாழ்க்கையே அவர் போதித்த உண்மைகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிற்று. - டிரைடன்[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 124. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. 2.0 2.1 2.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 175. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உபதேசம்&oldid=21220" இலிருந்து மீள்விக்கப்பட்டது