தாமஸ் புல்லர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

தாமஸ் புல்லர் (Thomas Fuller, முழுக்காட்டுதல் 19 ஜூன் 1608 - 16 ஆகஸ்ட் 1661) ஒரு ஆங்கில போதகர், வரலாற்றாசிரியர் மற்றும் அறிஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

அறிவதில் ஆத்திரம்[தொகு]

 • ஒன்றைத் தெரிந்துகொள்ள ஆத்திரப்படுதல் அல்லது அவாவினால் தூண்டப்படுதல் என்பது, விலக்கப்பட்ட கனியுள் இருக்கும் கொட்டை போன்றது. இயற்கையால் மனிதனின் தொண்டையில் அது ஒட்டிக்கொள்கின்றது. சில சமயங்களில் அவன் மூச்சையும் அது அடைத்துவிடுகின்றது - ஃபுல்லர்[1]

அறிவுடைமை[தொகு]

 • நீ அறிவு பெற்றிருந்தால், அந்தச் சுடரில் மற்றவர்களும் தங்கள் விளக்குகளை ஏற்றிக்கொள்ளட்டும்.[2]

சமய போதனை[தொகு]

 • ஆன்மாவிலிருந்து வெளிவரும் உபதேசமே ஆன்மாவைக் கவர்ச்சி செய்யும்.[3]

கவிதை[தொகு]

 • கவிதை, சொற்களின் இசை.[4]

கேலி[தொகு]

 • சாதாரணமாக ஒரு முறை கேலி பேசுவது நல்லது. ஆனால், கேலியைத் தொழிலாக வைத்துக்கொள்ளக்கூடாது.[5]

சுட்டி (நூல்)[தொகு]

 • அட்டவணையில்லாத நூல். ஊசியில்லாத திசைகாட்டும் கருவி போன்றது. அதனால் திகைப்பு அதிகமாகுமேயன்றி. திசை தெளிவாகத் தெரியாது.[6]
 • அட்டவணை அவசியமான உதவி: அது இல்லாவிட்டால், ஒரு பெரிய ஆசிரியரின் நூல் உள்ளே நுழைய முடியாத காடாகவே இருக்கும்.[6]

தங்கம்[தொகு]

 • உன் தங்கம் கையிலிருந்தாலும் இருக்கட்டும். அதை இதயத்தில் பதித்துவிட வேண்டாம்.[7]

தருக்க நூல்[தொகு]

 • ஒழுக்கம் ஆன்மாவை நலமுறச் செய்யும். ஆனால், தருக்க நூல் அறிவின் ஆயுதசாலை, அதில் தாக்குவதற்கும் தற்காப்புக்கும் உரிய எல்லா ஆயுதங்களும் இருக்கும்.[8]

நட்பு[தொகு]

 • பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே நீ கொடுப்பது நின்றால், அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்றுவிடுவர்.[9]

நெருக்கமான பழக்கம்[தொகு]

 • நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும் முடிவில் வெறுப்பை உண்டாக்கும்.[10]

பயணம்[தொகு]

 • நீ உன் நாட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னால் உன் நாட்டில் பெரும் பாகத்தை நன்றாகத் தெரிந்துகொள்.[11]

பழிவாங்குதல்[தொகு]

 • பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியைவிட உயர்ந்தவராவோம். [12]

குறிப்புகள்[தொகு]

 1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 66-67. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 175. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 157-158. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164-165. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 6. 6.0 6.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -18. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 245. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268-269. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 12. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாமஸ்_புல்லர்&oldid=35410" இருந்து மீள்விக்கப்பட்டது