உரைநடை
Appearance
உரைநடை என்பது ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஒரு எழுத்து வடிவம் ஆகும். கவிதை போல அணி இலக்கணம் இன்றி நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது உரைநடையாகும். உரைநடை பெரும்பாலும் தகவல்களை விளக்குவதற்கும், ஒருவருடைய எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- உரைநடை எழுத விரும்பினால் உரைப்பதற்கு ஏதேனும் விஷயமிருத்தல் இன்றியமையாததாகும். ஆனால் விஷயம் ஒன்றுமில்லாதவனும் செய்யுள் செய்து விட முடியும். -கதே[1]
- இவர் எழுதுவதில் தெளிவில்லை என்று கூறுவோர் அப்படிக் கூறுமுன் தம் இதயத்தில் தெளிவுண்டா என்று ஆராய்தல் அவசியம். எழுத்து எழுத்தாகப் பிரித்து எழுதியிருந்தாலும் கண்ணுக்கு இருட்டில் ஒன்றும் புலனாகாது. -கதே[1]
- இயற்கையான உரைநடையைக் கண்டால் ஆச்சரியமும் ஆநந்தமும் உண்டாகின்றன. அதற்குக் காரணம் அதில் எதிர்பார்க்கும் வண்ணம் ஆசிரியன் ஒருவனைக் காணாமல் மனிதன் ஒருவனைக் காண்பதே யாகும். -பாஸ்கல்[1]
- உரைநடையின் மொழிகள் கவனத்தைக் கவருமானால் அந்த உரைநடை தவறானது. பெரியோர் நூலில் எத்தனை பக்கங்கள் படித்தாலும் உரைநடையின் மொழிகளில் கவனம் செல்லாதிருக்கும். -கோல்ரிட்ஜ்[1]
- சிறந்த எழுத்தாளர் பிறர் எழுதும் வண்ணம் எழுதாமல் தாம் எழுதும் வண்ணமே எழுதுவர். -மாண்டெஸ்க்யூ[1]
- தெளிவில்லாத உரைநடை படிப்போர்க்கு விளங்காத நடை எனவும், எழுதியவனுக்கு விளங்காத நடை எனவும் இருவகைப்படும். -மாரி[1]